பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் $89 அப்போது அறிஞர் குத்துசி குருசாமியார் திருவல்லிக்கேணியிலே ஒரு சுவடியை வைத்துக் கொண்டு அச்சுப்பிழைபாாத்துக் கொண்டிருந்தார். அதிலுள்ள யாவும் பாடல்களாகவே இருந்தன. அவை என்ன பாடல்கள்?’ என்று நான் அந்த அறிஞரை வினவினேன். அவர் உடனே பிழைதிருத்துவதை நிறுத்திக்கொண்டு அதை என்னிடம் கொடுத்தார். அதிலுள்ள பாடல்கள் தமிழைக் குறித்தனவாகவும், சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டனவாகவும், இயற்கைக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவும் கலந்திருந்தன. நான் அந்த அற்புதப் பாடல்களைப் படித்துப் பார்த்து விட்டு இவை பாரதியார் பாடல்களையும் விஞ்சியனவாக இருக்கின்றனவே! இவைகளைப் பாடியவர் யாவர்? என வினாவினேன். அப்போது அவர் "இந்தப் பாடல்களைப் பாடியவர் பாரதியாரின் மாணவரே ஆவர். கனகசுப்புரத்தினம் என்பது அவர் தம் இயற்பெயர். பாரதிதாசன் என்னும் புனைபெயரால் இவைகளை அவர் பாடியிருக்கிறார். இன்னும் இரண்டொரு நாளில் சுவடியாக வந்துவிடும்” என்று அவர் கூறினார். இந்தி எதிர்ப்புக் காலத்தில் அந்தப் புரட்சிப் பாடல்களே எங்களுக்குப் பெரிதும் உதவின. 1937-இல் ஸ்டாலின் ஜெகதீசன் கட்டாய இந்தி ஒழிய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவருடைய உண்ணாவிரதம் முதலில் சி.டி.நாயகம் அவர்கள் தம் இல்லத்தில் தான் துவங்கியது. முதலில் ஒரு சில நாட்களேனும் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். அப்போது சில அன்பர்கள் இந்தி எதிர்ப்புக்காக ஸ்டாலின் ஜெகதீசன் உண்ணாவிரதம் இருந்து வருதலைத் தெரிவித்துச் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போடவேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அறிக்கையினைத் தாங்கள் அச்சடித்துக் கொடுப்பதாகவும் கூறினார்கள். அதற்கு இரண்டொரு வாரத்திற்கு முன்பு ஈ.வெ.ரா. பெரியார் கட்டாய இந்தியைக் கண்டித்து எழுதியதோடு "கூட்டம் போட்டு இதைக் கண்டிப்பதற்கு எந்தப்புலவனும் முன்வர வில்லையே!” என்றும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததால் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போட்டுக் கண்டிப்பதாக ஒப்புக் கொண்டேன். அப்போது தியாகராய நகரிலுள்ள இராஜாஜி வீட்டு வாயிலில் சில தமிழ் அன்பர்கள் மறியல் செய்தனர். அந்த மறியலைக் கண்ட இராஜாஜி அவர்கள், "இந்தி மொழியை எங்கே கற்பிக்கின்றார் களோ அங்கே சென்று மறியல் செய்யுங்கள். என் வீட்டு வாயிலில் மறியல் செய்வது சிறிதும் பொருந்தாது” என்று கூறினார். அப்போது