பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шкзалѣзі-есѣцарвареоѣарень 191 டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும், வ.பா. தாமரைக்கண்ணி அம்மையாரும்'செந்தமிழைக் காப்பதற்காகச் சேனை ஒன்று வேண்டும்” என்னும் பாரதிதாசரின் பாடலைப் பாடிக் கொண்டே இந்தி எதிர்ப்புக்காக மாபெரும் சேனையைத் திரட்டினர். சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பாவேந்தராகிய பாரதிதாசனாரின் பேச்சுத்திறனைக் கேட்டு வியந்திருக்கின்றேன். ஆதலால், "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் بهحه ه جسم تا கொண்ட அவர் தோற்றப் பொலிவுடன் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டது. 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்னும் பாடலைப் பாடிக் கொண்டே, டாக்டர் தருமாம்பா அம்மையாரும், மலர்முகத்தம்மையாரும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு 1938ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாளன்று சிறை புகுந்தனர். அதன்பிறகு நான் புதுவைக்கு அடிக்கடி சென்று கூட்டங்களில் தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றி இருக்கின்றேன். எனினும் நான் பாரதிதாசர் தம் இல்லம் சென்று அவரைக் கண்டதில்லை. தமிழைப் பழிப்போரைத் தாக்கிப் பேசும் அவருடைய கடுமையான பேச்சிலிருந்து அவர் ஒருகால் முரடராய் இருப்பாரோ என்று நான் ஐயம் கொண்டதே அதற்குக் காரணம். எனினும் நான் பேசும் கூட்டங்களில அவருடைய மாணவர்கள் பெரும்பாலோர் வந்து என்பேச்சைக் கேட்டு மகிழ்வதுண்டு. நான் ஒருநாள் ஒய்வாக இருந்தபோது அவருடைய மாணவர்களுள் ஒருவர் என்னிடம் வந்து பாரதிதாசனார் இளமையிலே முருகபக்தராக இருந்தபோது பாடிய பாடல்களை எல்லாம் என் முன்னிலையில் இசையோடு பாடிக் காட்டினார். அவை மிகவும் உருக்கமான பாடல்களாக இருந்ததைக் கண்டு நான் வியந்தேன். வேறொரு கூட்டத்தில் புதுவையிலே நான் தலைமை வகித்துப் பேசியபோது, பாரதிதாசரைக் குறித்து உங்கள் எண்ணம் என்ன? என்று ஒருவர் கடிதம் மூலம் கேட்டு எழுதியிருந்தார். “நம் பாவேந்தரைப் போற்றாத தமிழன் நம் நாட்டில் இருக்க மாட்டான். அவ்விதம் இருந்தால் அவன் தமிழனல்லன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்! என்று பாடியுள்ள ஒரு வீரத் தமிழ்க் கவிஞருக்கு என் பாராட்டு எந்த மூலை! எனினும்