பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகுசுந்தரம் செய்திகளைக் கூறுவர்; சிலர் பலமுறை நடக்கவைத்துச் செய்திகளைக் கூறுவர்; சிலர் பலமுறை நடக்கவைத்தும் செய்தி எதுவும் கூறமாட்டார்கள். பாவேந்தரோடு நெருங்கிப் பழகிய குடும்ப நண்பரொருவர் சென்னையில் வாழ்ந்தார். அவரைத் தேடிச் சென்றால், எனக்குத் தடபுடலாக விருந்தெல்லாம் நடக்கும்; செய்தி மட்டும் கிடைக்காது. அவரும் எழுதி வெளியிட்டபாடில்லை; இப்போது இறந்தும் விட்டார். பாவேந்தரோடு உள்ளங்கலந்து பழகிய அரசியல் நண்பர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் 'அண்ணாவைப் பற்றிப் பாரதிதாசன் என்று தரக்குறைவாகப் பத்திரிகையில் எழுதினாரோ, அன்றே வீட்டில் மாட்டியிருந்த அவர் படத்தையும், உள்ளத்தில் மாட்டியிருந்த அவர் நினைவையும் தூக்கி எறிந்து விட்டோம்” என்று முகத்திலடித்தாற்போல் கூறுகிறார்கள். இன்றும் பாவேந்தரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. சில அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும்போது பாவேந்தர் மீது காட்டும் பரிவையும், மதிப்பையும், தனிமையில் சந்திக்கும் நேரங்களில் காட்டுவதில்லை. சில அரசியல் தலைவர்களை நெருங்கவே முடியவில்லை. கிடைத்தற்கருமையான பாவேந்தரின் புகைப்படங்கள் சிலரிடம் இருக்கின்றன. திருவானைக்காவலில் நடைபெற்ற மணிவிழாப் படமொன்று மதுரை அன்பர் ஒருவருடைய வீட்டில் சட்டம் கூட இல்லாமல் குப்பையோடு குப்பையாகக் கிடந்தது. ஆனால் அந்தப் படத்தைக் கொடுக்க அவர் விரும்பவில்லை; கறையானுக்கு உணவாக்க முடிவு செய்திருக்கிறார். குப்புறப்படுத்து மார்புக்குத் தலையணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு பாவேந்தர் எழுதும் வழக்கமுடையவர் என்ற செய்தியைப் பலரும் கூறுகின்றனர். ஒரு குழித்தலை அன்பர் அந்த நிலையிலேயே பாவேந்தரைப் படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்க்கக் கேட்டபோது எங்காவது கிடக்கும்; தேடிப் பார்க்கணும் என்று அசிரத்தையாகக் கூறிவிட்டார். பாவேந்தரோடு பழகிய நண்பர்களில் நூற்றுக்கு எண்பது பேர் தங்கள் இல்லத்தில் அவருக்கு விருந்து வைத்ததைப் பற்றியும், அவரது நடையுடை பாவனை பற்றியும் மேலோட்டமான