பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நினைவுத்துளிகள் கலந்து கொண்டார்கள். அவ்விழாவிற்குப் புரட்சிக் கவிஞரும் வந்தார். அம்மாநாட்டில் என் மாமனார் இராவ்சாகிப் ஆறுமுகநாடார் அவர்கள் பெரும் பங்கு கொண்டார்கள். அவருக்கு இவ்விருவரையும் நகரதுதன் ஆசிரியர் அறிமுகம் செய்துவைத்தார். உடனே கவிஞர் தமது கவிதைத் தொகுதி முதற்பாகத்தைத் தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக என் கணவருக்குத் தந்தாராம். அன்றுமுதல் என் கணவருக்கும் புரட்சிக் கவிஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக என் கணவர் என்னிடம் கூறியிருக்கிறார். நாய்ஸ் ஆங்கிலப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் தமிழ்ப்பாடம் நடந்து கொண்டிருந்தது. அன்று புரட்சிக் கவிஞரின் நிலாப்பாட்டை ஆசிரியர் கற்றுத் தந்தார். அவர் குழந்தைகளிடம் இப்பாடலைப் பாடியவர் பாரதிதாசன் என்று கூறினார். அவர் யார் தெரியுமா? என்று வினவினார். உடனே வகுப்பிலிருந்த என்மகள் ஏழிசை ஆசிரியரிடம் "ஓ! எனக்குத் தெரியுமே! அவர் எங்கள்தாத்தா!" என்று கூறினாள். ஏனென்றால் அவள் அவரை அப்படித்தான் அழைப்பாள். ஆசிரியர் வியந்தபடி 'உன்தாத்தாவா? என்று வினவ அவள் "ஆமாம்! எங்கள் தாத்தாதான். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். வரும்போது உங்களிடம் கூறுகிறேன்" என்றாள். அதற்குப்பின் கவிஞர் எங்கள் வீட்டிற்கு வந்தார். என் மகள் அவரைப் பார்த்துத் தாத்தா! அந்த நிலாப்பாட்டு நீங்களே எழுதியதா?’ என்று கேட்டாள். என்னே அவளறியாமை; உடனே அவளை வாரி எடுத்துக் கொண்டு, "நல்ல கேள்வி கேட்டாயே என்னை எந்தெந்தப் பயலோ என் கவிதைகளையும் கருத்துக்களையும் திருடுகிறான் என்று நான் வழக்காட வேண்டியிருக்க நீ என்னையே ஐயுற்றாயே!” என்று நகையாடினார். ஒருநாள், "பலமுறை நான் உங்கள் வீட்டிற்கு வந்துள்ளேன். நீங்கள் சென்னைக்கு வரும்போது கட்டாயம் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்" என்று அன்புடன் அழைத்தார். அவ்வண்ணம் நாங்கள் சென்னை சென்றபோதவர் வீட்டிற்குப் போனோம். அப்போது பாண்டியன் பரிசு என்ற அவரது காப்பியத்தைப் படமாக்கும் திட்டம் நடந்து வந்தது. படமெடுக்க ஆகும் செலவிற்கு ஒருவர் பெருந்தொகை கடன் தர இருந்தார். அவரால் அனுப்பப்பட்ட ஆள் பத்திரத்தைக் கவிஞரிடம் கொண்டுவந்தார். அவரைப் பார்த்துக் கவிஞர், "சரி, பத்திரம் வந்துவிட்டதா? நான் கையெழுத்திட்டுத் தந்து விடுகிறேன். இதோ! தம்பி (என் கணவரைச் சுட்டி வருவார். அவரிடம் அத்தொகையைக் கொடுத்தனுப்புங்கள்"