பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - & 201 படித்தேன். அதனால் தன்மான இயக்கக் கொள்கைகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. மேலும் ஜீன்ஸ் மெஸ்லியர் மரணசாசனம் (மூன்றுபாகம்), இங்கர்சால் புத்தகங்கள், பெரியாரின் தத்துவ விளக்கம், பிரகிருதவாதம் முதலிய நூல்களைப் படித்தேன். சாதி, மதம், கடவுள், முக்தி, நரகம் முதலியவைகளில் எனக்கு நம்பிக்கை அறவே அற்றுப் போயிற்று. நாத்திகவாதத்தில் நல்ல தெளிவும், ஆழ்ந்த நம்பிக்கையும் எனக்குண்டு. நல்ல எண்ணத்தோடு, விருப்பு வெறுப்பு இல்லாமல் பல ஆயிரம் தடவை சிந்தனை செய்தாலும், 'கடவுள் உண்டு என்பதற்கு என்னால் ஆதாரம் காண இயலவில்லை. ஆகவே, நான் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். முதலில் செய்தித்தாள்களில் வெளியான சில பாரதிதாசன் கவிதைகளைப் படித்தேன். பின்பு திருமதி. குஞ்சிதம் குருசாமி அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட பாரதிதாசன் கவிதைகளைப் படித்தேன். ஒவ்வொரு கவிதையும் இனித்தது. ஆயினும் சாதி, மதம், கடவுள்களைப் பற்றிய கவிதைகள் எல்லாக் கவிதைகளையும் விட என் உள்ளத்தில் இடம் பெற்றன. இதன் பயனாகப் பாரதிதாசன் அவர்களைக் காணவும், பேசவும் வேண்டுமென்ற விருப்பம் என் உள்ளத்தில் பதிந்தது. பாவேந்தர் அவர்களை என் சொந்த ஊரான நாமக்கல் போடிநாய்க்கன்பட்டிக்கு அழைத்து வந்தேன். நாமக்கல் தமிழர் சங்கக் கட்டிடத்தில் பெரிய புராணம், இராமாயணம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். பாவேந்தரின் நூல்களை அச்சிடு வதற்காகவும், அவர் எழுதிய நாடகங்களை நடத்துவதற்காகவும் 'முத்தமிழ் நிலையம் என்ற அமைப்பை உருவாக்க நானும் என் நாமக்கல் நண்பர்களான திருவாளர்கள் என். கிருஷ்ணராஜ், கா.கருப்பண்ணன், கா. பெருமாள் ஆகியோரும் ஒரு முடிவுக்கு வந்தோம். பிறகு பாவேந்தர் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தோம். 15 நாட்கள் கழித்துச் செட்டிநாடு கானாடுகாத்தானுக்குப் புறப்பட்டு வரும்படி கவிஞரிடமிருந்து எனக்கு ஒர் அவசரக் கடிதம் வந்தது. கானாடுகாத்தான் தனவணிகர் திரு.வை.சு.சண்முகம் அவர் மனைவியார் திருமதி மஞ்சுளாபாயும் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர்கள். வை.சு. சண்முகம் செட்டியார் அப்போது செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் வீடான இன்பமாளிகைக்கு நான் சென்றேன். பாவேந்தரும் எனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார்கள். முத்தமிழ் நிலையத்தைத்