பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இன்ப இரவு க. அப்பாதுரை எம்.ஏ., ஆகியவர்களும் மற்றும் நடிகையர் அரங்கநாயகி, முனி ரத்தினம்மா, இராதாமணி, சுலோசனாபாய் முதலியவர்களும் பரதநாட்டியம் பயிற்றும் தோழர் இராமசாமிப் பிள்ளை அவர்களும், ஒரியண்டல் நாட்டியம் பயிற்றும் வங்காளத்தைச் சேர்ந்த தேவிபிரசாத் அவர்களும், இசைப்புலவர் ஞானமணி அவர்களும், புதுவை பாரதிதாசன் அவர்களும் கலந்து கொண்டனர். விருந்திற்குப் பின் மேற்கண்ட நடிகையர்களாலும் ஆசிரியர்களாலும் பாரதிதாசன் அவர்களின் கவிதைகள் நடனமாக நடித்துக் காட்டப்பட்டன. சில வாலிபர்களால் வடநாட்டு உதய சங்கர் அவர்களின் நாட்டியமும் நடத்திக் காட்டப்பட்டது. இவை களில் மூடநம்பிக்கைப் பாட்டுக்களோ, ஆபாச வார்த்தைகள் கொண்ட பாட்டுக்களோ இல்லாமல் கவிதைகள் பெரிதும் அறிவுக்கு விருந்தாகவும், படிப்பினைக்கேற்றதாகவும் இருந்தன. இவை முடிந்ததும் தோழர் சின்னராசு அவர்கள் பெரியாரைப் பேசுமாறு கேட்டுக் கொண்டார். பெரியார் பேச்சு "அன்புள்ள தோழர் பாரதிதாசன் அவர்களே! மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே! இன்று உங்கள் மத்தியில் இருக்கவும், உங்கள் சங்கத்தின் கருத்துக்களையும், நோக்கங்களையும், வேலைமுறைகளையும் உணரவும் வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சி யடைகிறேன். இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த்திருப்பவற்றிற்குப் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். பாட்டுகளும் நடிப்புகளும் கடவுள்களையும் கல்வித்துறையையும் பற்றி இருப்பது காட்டுமிராண்டிக் காலத்தைக் குறிப்பதேயாகும். இன்றைய காலத்தையும் அவை குறிக்கும் என்று சொல்லப்படுமானால், அது பிறர் உழைப்பில் வாழும் வஞ்சகக் கூட்டமான பார்ப்பனர் (பூதேவர்)களுக்கும், பாமர மக்களைச் சுரண்டிப் போக போக்கியமனுபவிக்கும் கொள்ளைக் கூட்டமான (லட்சுமிபுத்திரர்களான) செல்வவான்களுக்கும் மாத்திரமே சொந்தமானதாகும். பார்ப்பனியக் கொடுமையும், பணக்காரத் திமிர்த்தொல்லையும்