பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இன்ப இரவு தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும், இம்மாதிரி பணி களுக்கு என்னால் ஆன உதவியை செய்ய எப்போதும் காத்திருக் கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை ஆகும்" என்று கூறினார். பிறகு பெரியாருக்கு மாலையிட்டுத் தோழர் முருகு. சுப்பிரமணியம் செட்டியார் வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். முத்தமிழ் நிலையத்திற்கு வருகைதந்து, பெரியார் பாராட்டிச் சொற்பொழிவாற்றிய அன்று, தாங்கள் நிலையத்திற்கு ஏதாவது பொருளுதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். பெரியார் அவர்கள் ஆவன செய்வதாகச் சொன்னார்கள். பெரியாரின் வருகைக்குப்பின் முத்தமிழ் நிலையம் புத்துணர்ச்சி யோடு செயல்படத் தொடங்கியது. இன்ப இரவு நாடகம் ஒரு கற்பனைச்சோலை; கலைக்களஞ்சியம். அது போன்ற ஒரு கலைநிகழ்ச்சியை இந்நாளில் காண முடியாது. "வாழியவே சீரோங்கிய தமிழகம்" என்ற வாழ்த்துப் பல்லவியுடன் 'இன்ப இரவு துவங்கும். இது சிம்மேந்திரமத்திபராகம், தாளம், பல்லவி, இரண்டாவது கல்யாணி ராகத்தில் நீலவான் மீது தோன்றும் கோலமென்ன சொல்வேன் தோழி" என்ற பாட்டு. அது முடிந்ததும் வள்ளிக்கண்ணு என்ற பெண்மணியின் கர்நாடக சதுர் அலாரிப்பு நிகழ்ச்சி இடம்பெறும். நடிகர்கள் ஒப்பனை செய்யச் சிறிது நேரமாகும்போது திரு. வேணுகோபால் சர்மா மேடையில் தோன்றி விகடம் செய்வார். அதாவது பாபநாசம் சிவன், விளாத்திக்குளம் சாமி முதலிய இசைப்புலவர்கள் பாடுவது போலப் பாடியும், பிடில், மிருதங்கம், கடம் முதலிய பக்க வாத்தியங்களை வாயிலேயே இசைத்தும் மக்களை மகிழ்விப்பார். முதலில் சிக்கல் இராஜகோபாலன் (இன்றைய கவிஞர் சுரதா) அவர்கள் "மாடு மேய்ப்பவனிடம் எனக்கென்ன வேலை?” என்ற பாடலை உரைநடையாகச் (இயல்) சொல்வார். அடுத்து ஞானமணி அதையே இசையோடும் பாடுவார். டி.வி. இராதாமணி என்ற பெண் அப்பாட்டுக்கு அபிநயம் படித்து அடுத்தாற்போல் ஆடுவார். இஃது முதலில் துவங்கும் முத்தமிழ் நிகழ்ச்சி. 1) திரு. வேணுகோபால் சர்மா இன்று புகழ் பெற்ற ஓவியர், மத்திய அரசின் பரிசைப் பெற்ற திருவள்ளுவர் ஓவியம் இவரால் வரையப்பட்டது. நுட்பமான இசையறிவும். போலச் செய்யும் ஆற்றலும் (mimicry) மிக்கவர்; பாவேந்தரோடு நீண்ட நாள் நெருக்கமாகப்