பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இன்ப இரவு பணவிடையில் வரும் பணத்தை வாங்கிக் கா. கருப்பண்ணன் அவர்கள் பாரதிதாசன் நிதிக்கணக்கில் வங்கியில் போட்டு வைப்பார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களிடமிருந்து என் பெயருக்கு 15.6.45 ஆம் நாள் ரூ.352/-க்கு காசோலை ஒன்று வந்தது. அக்காசோலையோடு கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பும் வந்தது. பெரியார் ஈ.வெ.ரா. நன்கொடை ரூ. 150.00 திரு. மத்திரன் அவர்கள் (திண்டுக்கல்) ரூ. 101.00 திரு. ஜீ. இலகr-மணன் (கல்வார்ப்பட்டி) ரூ. 101.00 ஆக ரூ. 352.00 திரு. மத்திரன் அவர்களும், திரு. இலகr-மணன் அவர்களும் பெரியார் பெயருக்கு நன்கொடைகளை அனுப்பி வைத்த காரணத்தால், பெரியார் அவர்கள் தமது தொகையையும் சேர்த்து அனுப்பி வைத்தார். இராசிபுரம் பாரதிதாசன் நிதி நாடகக் குழுவினர் காலஞ்சென்ற சலகை ப. கண்ணன் அவர்களால் தீட்டப்பட்ட வீரவாலி' நாடகத்தை நடத்தி, அதன்மூலம் வசூலான ரூபாய் 1084ஐயும், பாவேந்தர் அவர்களிடமே 22.11.45ஆம் நாள் கொடுத்தனர். அதன்பின்னர் என் உடல்நலக்குறைவால் நிதிவசூல் சிறிது மந்தமாக இருந்தது. உடல் நலம் பெற்றவுடன் நான் சென்னை சென்றேன். சலகை ப. கண்ணன் அவர்கள் அவ்வமயம் சென்னையில் இருந்தார் திருவாளர்கள் ப. கண்ணன், என்.வி. நடராசன், டி.என். இராமன் ஆகியவர்களிடம் நிதி விஷயத்தைச் சொன்னேன். அதாவது சென்னையில ஒருவிழா ஏற்பாடு செய்து வசூலான நிதிப்பணத்தை வழங்கிவிடலாம் என்றும், இல்லையேல் நாமக்கல்லிலேயே கொடுத்து விடுகிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அறிஞர் அண்ணா தலைமையில் நிதி ஆதரவுக் கூட்டம் போட்டு மற்ற கட்சியினரையும் அழைத்து ஆவணசெய்து விரைவில் நிதி கொடுத்துவிடலாம் எனக் கூறினார். அண்ணாவுக்கும் இது விபரத்தைக் கடிதம் எழுதிக் கேட்கலாமென்றும் சொன்னார்கள். அவ்வாறே கடிதம் எழுதி அண்ணாவின் சம்மதம் பெற்றோம். 1946ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் மாலை 5.30 மணிக்குக் கோகலே மண்டபத்தில் பாரதிதாசன் நிதி ஆதரவுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா, எஸ்.எல்.பாரதி, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி பார்-அட-லா, கி.வ.