பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 215 ஜகன்னாதன், கம்பதாசன் ஆகியோர் பேசினார்கள். அறிஞர் அண்ணா பேசும்போது, இங்கு வந்துள்ள பெரியவாகள், அவரவர்களுடைய நன்கொடைத் தொகையை இங்கேயே கூறிவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தம்முடைய அன்பளிப்பு ரூ.150 என்று சொன்னார். பிறகு டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி ரூ. 150/-ம், கவிஞர் கம்பதாசன் ரூ. 500/-ம், கி.வ.ஜ. ரூ.25/-ம் நன்கொடை தருவதாகச் சொன்னார்கள், மற்றவர்களின் தொகை என்ன என்பது இப்பொழுது எனக்கு நினைவில்லை. பாவேந்தர் நிதிவிஷயத்தில் அறிஞர் அண்ணாவின் தலையீடு ஏற்பட்டவுடன், புதுமுறுக்குடன் எல்லாரும் செயல்பட்டனர். நிதி வேகமாக வந்து குவியத் தொடங்கியது. 29.7.46ஆம் நாள் பாவேந்தரின் நிதியளிப்பு விழா சென்னை பச்சையப்பர் திடலில் நடைபெற்றது. நாவலர் ச.சோமசுந்தரபாரதியார் எம்.ஏ., பி.எல்., அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா தமிழக மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி பாவேந்தருக்கு ரூ.24,300/- (இருபத்து நான்காயிரத்து முந்நூறு ரூபாய்) அடங்கிய பொற்கிழியை வழங்கினார். தமிழ்மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தனர். சலகை ப. கண்ணனும், டி.என். இராமனும் நிதியளிப்பு விழாமலர் ஒன்று வெளியிட்டனர். தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர் பலர் அதில் பாவேந்தரைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். நான் நாமக்கல்லில் நிதிக்குழுவைத் தொடங்கியதிலிருந்து, சென்னையில் பாவேந்தருக்கு நிதிகொடுத்த வரையில் எனக்கென்று ஏற்பட்ட எந்தச் செலவுக்கும் என் கைப்பொறுப்பில்தான் செலவு செய்தேன். நாமக்கல் திரு.கா. கருப்பண்ணன் அவர்கள் நிதியளிக்கும் விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்து தொண்டாற்றினார்கள். பாவேந்தருக்கு நிதி கொடுக்கும் விஷயத்தில் பெரியாருக்கு உடன்பாடு இல்லை என்று பின்னர் பலரால் பேசப்பட்டது. பாவேந்தர் கூட இது விஷயத்தில் பெரியார் மீது ஐயங்கொண்டிருக்கலாம். பெரியார் துவக்க காலத்தில் தாமே ரூ. 150/- நன்கொடை வழங்கியதோடு, ஊக்கம் காட்டினார். ஆனால் பாவேந்தர் நிதி இருபத்தையாயிரம் ரூபாயை எட்டிப் பிடிக்கும் என்று அவர் நினைக்கவில்லை. அந்த நாளில் கால் இலக்கம் என்பது மிகப் பெரிய தொகை (நாமக்கல் கவிஞருக்கே அந்நாளில் ரூ.12,000/- தான் வழங்கினார்கள் வசதிமிக்க பேராயக் கட்சியார்) 1) பாவேந்தருக்கு வழங்கிய பொற்கிழி ரூ.25,000 என்று பொதுவாக எல்லாரும் குறிப்பிடுவதுண்டு. உண்மையாகக் கொடுத்த தொகை ரூ. 24,300/-தான்.