பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இன்ப இரவு இவ்வளவு பெரிய தொகையை ஒரு நல்ல கவிஞர் கையில் கொடுத்து அவரைச் சோம்பேறி ஆக்குகிறார்களே என்று பெரியார் அன்று கருதினார். ஆனால் நிதிவசூலுக்கு அவர் எப்போதும் தடை கூறியதில்லை. பாவேந்தருக்கு நிதியளிப்புவிழா ஏற்பாடு செய்த நேரத்தில் குயில்’ என்ற கவிதை ஏடு ஒன்றினைத்துவங்க வேண்டும் என்று திரு.டி.என். ராமனும், பாவேந்தரும் திட்டமிட்டனர். அது சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நானும் பாவேந்தரும் 10.12.46இல் புதுவையிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். அப்போது நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நான் கண்ட காதல்’ என்ற ஒரு கட்டுரையை அவரிடம் தந்தேன். பாவேந்தர் அதைப் படித்துப் பார்த்து, மிகவும் நன்றாக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டி, அக்கட்டுரையின் தலைப்பில் கனக சுப்புரத்தினம் கவிஞர் கழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மு. செல்லப்பன் என்பதற்காக எழுதி அக்கட்டுரையைக் குயிலில் வெளியிட்டார்கள். அதை என்னுடைய பெறற்கரிய பேறு என்று கருதிப் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன்; இன்றும் அடைகிறேன். 1943ஆம் ஆண்டு பாவேந்தருக்கு வயது 53 எனக்கு வயது 33. நான் அவர்களைவிட இருபது ஆண்டு இளையவன், என்றாலும், பாவேந்தர் என்னிடத்தில் அளவிலா அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தார். ஐயா அல்லது ரெட்டியார்!’ என்றுதான் என்னை எப்போதும் அழைப்பார். எவ்வளவு கோபமாக இருந்தாலும் நான் சொன்னால் பாவேந்தர் கேட்பார்; மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டார். நீங்கள் நிதி விஷயத்தைத் துவக்காமலிருந்தால், வேறு யாரும் துவக்கியிருக்க மாட்டார்கள் என்று என்னைப் பாராட்டிக் கூறுவார். 'யாரோ நாமக்கல் ரெட்டியாராம்; அவரால் சுப்புரத்தினத்துக்கு நல்லகாலம் வந்து விட்டது என்று புதுவை மக்கள் பேசிக் கொள்வதாகப் பாவேந்தர் என்னிடம் பெருமையாகச் சொல்வார். வாரத்திற்கு ஒரு கடிதமாவது புதுவையிலிருந்து எனக்கு வரும்; அவ்வாறே நானும் எழுதுவேன். அவரது புதிய கவிதை நூல் அச்சாகி வந்தால் உடனே எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார். பாவேந்தர் எப்போது பணத்திற்கு எழுதினாலும், உடனே தந்தி மணியார்டரில் பணம் அனுப்புவதுதான் என் வழக்கம். பாவேந்தரை நினைக்கும்போதெல்லாம். தமிழ்த்தாய் அணிந்திராத அணியையெல்லாம் சூட்டி, அவளை அலங்கரித்தவர். இருபதாம்