பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 21 பிறவாத உயர்ந்த தங்கை. இவர் கட்டுரை நெஞ்சைப் பிழியும் தன்மை வாய்ந்தது. பாவேந்தரின் பிறந்தநாள், ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு விதமாகக் குறிக்கப்பட்டு வந்தது. என் அன்பிற்குரிய நண்பர் டாக்டர் மா. அண்ணாத்துரை எனது வேண்டுகோளை ஏற்றுப் புதுவை நகரசபைக்குச் சென்று பாவேந்தரின் பிறந்தநாள் பதிவேட்டை நகல் செய்து தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார். அவர் உழைப்பு பாராட்டுதற்குரியது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பாவேந்தரோடு நீண்டநாளாகப் பழகியவர். பாவேந்தரைப் பற்றிய அவருடைய மதிப்பீடுகள் தமிழுணர்வின் அடிப்படையில் இலக்கிய நயம் பொருந்த அமைந்திருக்கின்றன. திருவாளர் திருலோக சீதாராமின் கட்டுரை ஒரு கவிஞனுக்கே உரிய பெருமிதத்தோடு எழுதப்பட்டுள்ளது. விருந்தும், தமிழ் தந்த செல்வமும் வித்தியாசமான கலைப் படங்கள். உலகில் ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பற்றியும், அவன் படைப்புகள் பற்றியுமே அதிக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தொகையில் அவை 50,000க்கும் மேற்பட்டவை. பாவேந்தர் பாரதிதாசனின் நூறாவது ஆண்டு நிறைவு பெறும் இந்நேரத்தில் அவரைப் பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் 400 நூல்களாவது வெளியாக வேண்டும் என்பது என் விருப்பம். நான் நேரில் சென்றபோது செய்திகள் உதவியும் எனது வேண்டுகோளுக்கிசைந்து கட்டுரைகள் அனுப்பியும் இத்தொகுப்பு உருவாவதற்குக் காரணமாக இருந்த பெரியோர்களுக்கு நன்றி. இந்நூலுக்கு இன்றியமையாத சில புகைப்படங்களை எடுத்தனுப்பிய திருமதி வசந்தா தண்டபாணி அவர்கள் எனது நன்றிக்குரியவர். பாவேந்தர் நினைவுகளை வெளிக்கொணர்வதில் தணியாத ஆர்வம் காட்டிவரும் அன்னம் வெளியீட்டாளர் தமிழரின் நன்றிக்குரியவர். முருகு சுந்தரம் 4/100 கான்வெண்ட் வீதி சேலம்-636016