பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கவியரசர்பாரதிதாசன் விழாவுக்கு மூன்றே நாட்கள் இருக்கின்றன. பாரதிதாசனுடைய புதல்வர் மன்னர் மன்னனும், மருகர் கண்ணப்பரும், கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் சென்று நிலைமையைக் கூறினார்கள். அவர் இவ்விஷயத்தில் கலந்து கொள்வது இயலாத காரிய மென்பதைத் தெரிவித்துவிட்டார். பின்னர் 'கவிஞரிடம் என்ன போய்ச் சொல்வது?’ என்று கேட்டார்கள். “கவிஞனாக இருப்பது வேறு; மனிதனாக இருப்பது வேறு என்று, விசுவநாதம் கூறுகிறார் என்று போய்ச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டாராம். விழாக் குழுவிலிருந்து தாம் விலகிக் கொண்டதாக முன்னமே அறிக்கை விட்டிருந்தபடியால், மறுபடியும் இதில் கலந்து கொள்வது பொது மக்களிடையே தம்மைப் பற்றிய முரண்பட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்குமென்று எண்ணியிருக்க வேண்டும். கவியரசரிடம் முத்தமிழ்க்காவலர் கொண்டிருந்த எல்லையற்ற மதிப்பும், பரிவும் நாடறிந்தவை. எனினும் மணிவிழாவில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அவருக்கே வேதனையாக இருந்திருக்கும். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருப்பது என்னால் இயலவில்லை. அரு. ராமனாதன் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். விழாவை எப்படியாவது சிறப்பாகக் கொண்டாடி விடுவது என்று தீர்மானித்தோம். உடனே அவசர அவசரமாக அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி, முன்னர்த் திரட்டிய நிதியில் ஆயிரத்துக்குச் சற்று அதிகமாகவே தொகை எங்களிடம் இருந்ததை அவருக்குக் காணிக்கையாக்கிப் பொன்னாடை போர்த்திச் சிறப்புடன் விழாவைக் கொண் டாடினோம். குழந்தையைப் போன்ற இனிய எளிய சுபாவம் படைத்த பாவேந்தர், முன் கோபம் உடையவர். கோபம் வந்து விட்டால் யாரும் எதிரில் போக முடியாது. அனுசரித்துப்போக மாட்டார். இதனால் இவரை அணுகிப் பாராட்ட முன் வந்த பலர் பின்னர் இவரை விட்டுப் பிரியும் சந்தர்ப்பங்களும் வந்ததுண்டு. புதுவை அரசியலில் முக்கியமான பங்கும் பெற்றிருந்தார். ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தினார். ஒரு சமயம் பாரதியாரின் புதல்வியரும் நானும் அந்த விழாக்களில் சென்று கலந்து கொள்ளும்படி செய்தார். பாரதியாரைப் பற்றிய அவரது நினைவுகளை நான்கைந்து பதினைந்து நிமிஷப் பேச்சுக்களாகத் திருச்சி வானொலியில் ஒலிப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பாரதியின் பெருமையை