பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாவேந்தருடன் ஒரு நாள் கவிஞர் மணிவேலன், எம்.ஏ., அதிகன் ஆண்ட தகடூர் நாட்டு அரூரில் ஆசிரியர் பணிபுரியும் கவிஞர் மணிவேலர் குழந்தைக் கவிதையும் குமரர் கவிதையும் கைவரப் பெற்றவர். இனிக்கப் பேசும் தனித்தமிழ் நண்பர்; இலக்கிய ஆராய்ச்சி செய்து வருபவர். ஆங்கில மேதை ஜான்சனோடு பாவேந்தரை இவர் ஒப்பிடும் அழகு படிக்கப் படிக்கச் சுவை பயக்கிறது. பாவேந்தரோடு தாம் பழகிய ஒருநாளை, இக் கட்டுரையில் திருநாளாக்கிக் காட்டியிருக்கிறார். "நான் ஒருநாள் காலை விழித்தெழுந்தேன்; நான் புகழ் பெற்று Gol Gi sã Grairl song, golfiG56är” (I awoke one morning and found myself famous) என்று கூறினான் ஆங்கிலப் பாவலன் பைரன். அவன் எழுதிய நூலாகிய Childe Herold வெளியானவுடன், எல்லா ஏடுகளும் பைரனைப் பற்றியும் அவன் நூலைப் பற்றியுமே எழுதியிருந்தன! எனவே அவனுடைய நூல் எப்படியிருக்கும் நடை எவ்வாறு கவரும் என்பதை யாவரும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பாவலனின் நடையில் எளிமையும் உணர்ச்சியோட்டமும் கைகோர்த்துச் செல்வதைக் காணலாம். அவனுடைய பாக்கள் உள்ளத்தைக் கவருவதைப் போலவே அவன் தோற்றமும் கவரும்! தமிழிலே, பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூல் வெளி வந்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் அவர் புகழ் பரவி விட்டது. இந்தக் காலத்தில் நான் இத்தனைப் புதினங்கள் எழுதியுள்ளேன் என்று எண்ணிக்கையைக் காட்டித் தம்மைத்தாமே