பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாவேந்தருடன் ஒருநாள் "அத்தோடு விட்டால் போதும்!"இது என் நண்பரின் விளக்கம். இது நடந்த பின்னும் அவரைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் குறையவே இல்லை. ஆசை வெட்கமறியாது” என்று நாட்டுப்புறத்தில் ஒரு பழமொழி உண்டன்றோ? 1962 மே 16ஆம் நாள்: சென்னைத் தியாகராயநகர் இராமன் தெருவில் குடியிருந்த வீட்டுக்கு அவரைப் பார்க்க கிளம்பினேன். பத்தாண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் காட்டிய பூச்சாண்டி என் மனத்திரையில் நிழலாடியது. பாசுவல் தம்மை முதன் முதலில் சந்திக்க வந்தபோது சான்சன் அவரை எவ்வளவு மானக்கேட்டைச் செய்தார்! ஆனால் அவர் விட்டாரா? அவருடைய உயிருக்குயிரான நண்பராக, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியராக பாசுவல் மாறிவிடவில்லையா? இந்த வரலாற்றைப் படித்திருந்த துணிவு பூச்சாண்டியின் மீது மின்னொளியைப் பாய்ச்சியது. நான் புறப்படும்போது என் உறவினர் ஒருவர் எதற்கும் தெரிந்த வரை அழைத்துப் போங்கள்; அவர் ஒருமாதிரி..." என்று சொன்னார். நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை. திடீரென்று மழைப்பிடித்துக் கொட்டத் தொடங்கியது. பாதி நனைந்து ஒதுங்கி நின்றேன். மழை சிறிது நின்றதும் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டு முகப்பில் "பாரதிதாசன் பிக்சர்ஸ்" என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டிருந்தது! - அதாவது தூக்குப் போட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் தாழ்வாரத்தில் ஒருவர் குயில் ஏடுகளை முகவரி எழுதி விடுப்பதில் முனைந்திருந்தார். "பாதிக் குளியலுடன் வந்து நின்ற என்னைப் பார்த்து "நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்றார் அந்த இளைஞர். “என் பெயர் மணிவேலன்...” சொற்றொடரை முடிக்கவில்லை. "நீங்களா அது? குயிலில் "தென்னைப் பெண்ணே!" என்ற பாடலை எழுதியிருக்கிறீர்களே... அவரா?” "ஆமாம்!” "நான்தான் பொன்னடியான், பாவேந்தரின் உதவியாளன்." "இங்கேயே சிறிது நில்லுங்கள்; பாவேந்தர் விழித்துக் கொண் டிருக்கிறாரா என்று பார்த்து விட்டு வருகிறேன், பொன்னடியான் உள்ளே சென்றார். எனக்கு வியப்பு! நான் எழுதிய பாடலைக் கூட நினைப்பு வைத்திருக்கிறாரே இந்த இளைஞர்! பாவேந்தர் அந்தப் பாடலைப்