பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 233 'தம்பி குயிலில் சேர்ந்து பணி செய்கிறாயா?" "எனக்குக் குடும்பம் இருக்கிறது.” És .. மாலை (சிறிது மோனநிலை) முழுநேரத் தமிழ்த் தொண்டனாக நீ மாற வேண்டும். ....சிறப்புரை எழுதி உனக்கு அனுப்பி விடுகிறேன். நீ போ... ஆனால்...." நான் திகைத்தேன், என்ன நடக்கப் போகிறதோ என்று, "நீ இனிமேல் யாரிடமும் முகவுரைக்காக அலையாதே...! முடவனுக்குத்தான் ஊன்றுகோல் தேவை!" இதைச் சொன்னவுடன் நான் விடைபெற்றுக் கொண்டேன். உண்மையிலேயே தமிழக அரசு நடத்தும் பரிசுச் சீட்டில் ஓரிலக்கம் உருபா எனக்குக் கிடைத்திருந்தாலும் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காது! அப்படித் திரும்பினேன்! - 'நீ முழு நேரத் தமிழ்த் தொண்டனாக மாற வேண்டும்" - இது என் செவியில் இன்னும் எதிரொலிக்கிறது! நான் கண்டிப்பாக இன்னும் மாறவில்லை! காரணம் எனக்கு வயிறு என்று ஒன்று இருக்கிறது! அதுமட்டும் இருந்தால் கூடத் தாழ்வில்லை! என் மனைவி மக்களுக்கும் வயிறுண்டு!"