பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 எனக்குப் பாவேந்தர் பாரதிதாசனார் நினைவு ஒர் இனிய கனவு. அவரோடு நான் கொண்ட உறவு பெருமைக்கு உரியது மட்டுமல்ல; எனக்குப் பெருமிதம் தருவதும் ஆகும். திருவள்ளுவர் தந்த முப்பாலை ஆராய்வதன் வழித் தமிழினத்தின் தலைமகனாம் அவரோடு என்னை உறவுபடுத்திக் கொள்வதில் எனக்கு எவ்வளவு பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றனவோ, அவ்வளவு பெருமையும் பெருமிதமும் பாவேந்தரோடு எனக்கேற்பட்ட உறவால் உண்டாகின்றன. அவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற பாவலர்; பாட்டிலக்கியத்தில் முடிசூடா மன்னர். யாருக்குத்தான் இழந்த செல்வம் தி. முருகரத்தினம் பரபரப்புக்கும் பாராட்டுக்கும் காரணமான பல அறிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய பச்சையப்பர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர் முருக ரத்தனம். இன்று தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் தலைமை நடத்தும் அறிஞர் மு.வ.வின் மாணவர் படைவரிசையில் முன்னணி வீரர். கொங்கு நாட்டுச் சேர்வராயன் மலைச்சாரலில் பிறந்து மதுரைப் பசுமலையின் அடிவாரத்தில் காதலித்துக் குடியேறியவர். அறிஞர் அண்ணாவின் முயற்சியால் நிறுவப்பட்ட மதுரைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வகத்தின் இந்நாள் இணைப் பேராசிரியர், நூலாசிரியர், மொழியாராய்ச்சி வல்லுநர். அவர் உறவு பெருமிதம் தராது?