பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 235 பாவேந்தரோடு உறவு சிறியதுதான்; ஒரு சில சந்திப்புகள் கொண்டதே நீண்டகால இடைவெளியும் கொண்டது; ஆனால் அரியது; நான் நினைவில் கொண்டு போற்றி வைத்தலுக்கு உரியது. வறியோன் வயிரமாலை ஒன்றை போற்றிப் பேணுவது போன்றது அது. 1950 முதல் 1956 வரையிலான காலம் அது தமிழுணர்ச்சி வெள்ளம் போல் பாய்ந்து பரவிய காலம். தமிழ் தவிர வேறு ஒன்றும் அறியாத ஒருமை உள்ளம் அன்றைய என் உள்ளம். ஒரளவு தமிழ் வரலாறு தெரியும். ஒரு சிறிது தமிழ் இலக்கண இலக்கியம் தெரியும் தமிழுணர்ச்சியின் ஊற்றுக்களான மறைமலை, பெரியார், அண்ணா என். ஆசான்கள். அவ்வியக்கத்தின் போர்ப்பாவலர்செயங்கொண்டார் பாரதிதாசன், அவர் பாட்டும் உரையும் எனக்குப் பாடம். தமிழ் வாழ்வு பகுத்தறிவுக் கொள்கை. தமிழால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் பயில எண்ணம் கொண்டிருந்தேன். முனைவர் மு.வ. புகழ் தெரியும்; மு.வ. நூல்கள் அறிமுகம். பைந்தமிழைப் பற்றோடு கற்பிக்கும் பச்சையப்பன் கல்லூரியில் மு.வ. நிழலில் விரும்பிச் சென்று தங்கித் தமிழ் படித்தேன். 1953 முதல் 1956 வரை பி.ஏ. (ஆனர்சு) கொள்கையாராட்சி கட்சிக்கூட்டங்கள்... காட்டாற்றுப் போக் கில்லை; சமவெளியாற்றுப் போக்கு. இந்நிலையில் சென்னைக்கு வந்திருந்த பாரதிதாசனாரை என் இனிய நண்பர் ஒருவரோடு காணச் சென்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேசுவதற்கு அழைத்தல் நோக்கம். கவிஞர் அமைதியாக வரவேற்றார்; தயங்காது ஒத்துக் கொண்டார். அது அவருக்குச் சாதாரண வாழ்க்கைப் போக்கு, ஆனால் எங்கள் கல்லூரிக்கு வருவதி அவருக்கு வருமானம் ஒன்றும் இல்லை. இளைஞருடன் கலந்துரையாடலில் அவருக்கு இன்பம், அவரைக் கண்டு பேசியதில் எனக்கும் பெருமகிழ்ச்சி, ஒரு பெருங்கவிஞரை எளிதிலே கண்டுவிட்ட பெருமிதம். கவிஞர், பச்சையப்பன் கல்லூரியில் யார் தமிழ்த்துறைத் தலைவர் என்று வினவினார். 'டாக்டர் மு.வரதராசனார்' எனப் பெருமையோடு கூறிக் கொண்டேன். உடனே அவர் யார்? அந்தக் கரியனா என்றார். எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் மதித்துப் போற்றும் பேராசிரியரை ஆண்பால் ஒருமையால் கூறிப் பெயர் கூடச் சுட்டாது எளிய பட்டப் பெயர் வைத்துப் பாவேந்தர்