பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இழந்த செல்வம் வழங்கிவிட்டாரே என்பது என் உள்ளத்தைத் தைத்தது. நிலவொளியினை மேகம் மறைப்பது போன்று தோன்றியது. மு.வ.வுக்கும் பாவேந்தர்க்கும் நல்ல உறவு இருந்ததாகத் தெரியவில்லை? நட்பும் இருந்ததில்லை. சாதாரண அறிமுகம் மட்டுமே இருந்திருக்கிறது. இருவருக்கும் வேறுபாடு நிறைய உண்டு. பாரதிதாசனார் பகுத்தறிவுவாதி; தமிழியக்க முன்னோடி, பெரியார் பாசறைத் தலைவர். மு.வ. முன்னர் சைவசமயவாதி; பின்னர் சமரசவாதி; அரசியலில் காந்திய, தேசியவாதி. ஆகவே இருவர்க்கும் உறவு குறைவு. கவிஞர் கவியுலகக் குயில் பாட்டும் பண்பாடுமே வாழ்க்கையாகக் கொண்டவர்; மு.வ. வின் புதுத் தமிழியக்கம் கவிஞர்க்குப் புதிதே. கவிஞர் முதியர்; பெரியர்; அவர்க்கு எனத் தமிழ்ப் பேருலகில் பரந்த இடம் உண்டு. அவரைத் தமிழ் உலகம் புரட்சிப் பாவலர் எனப் போற்றியது. அத்தகையவர்க்கு மு.வ. எளியராகக் காட்சி தந்ததில் வியப்பில்லை. புரட்சிக் கவிஞர் யாரையும் எளிதாக நோக்கும் உயரிய தோற்றம் பெற்றவர். மு.வ. கரிய மேனியராயினும் வெள்ளிய உள்ளமும் ஒள்ளிய அறிவும் கொண்டவர். நான் அமைதி கொள்வது கடினமாக இல்லை. மற்ற தமிழாசிரியர்களைப் பற்றியும் கவிஞர் கேட்டார். அ.ச. ஞானசம்பந்தனாரைப் பற்றிக் கூறினேன். கவிஞர்க்குப் பழம் புராணங்கள் போற்றுவோரைப் பற்றி நல்லெண்ணம் இல்லை. பிறரைப் பற்றிக் கருத்துக் கூறுவதில் கவிஞர் சாதாரணமாகவே நடந்து கொண்டார். என் கல்லூரி நாட்களில் பாரதிதாசனாருடன் நெருங்கிப் பழகும் ஓர் அன்பரின் நண்பரும் என்னுடன் பயின்றார். அவர் லால்குடியைச் சேர்ந்தவர். பாரதிதாசனாருடைய பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் நான் அவர் வாயிலாகக் கேட்டதுண்டு. புதுவைப் பாரதிதாசனார்க்கு உள்ளூரில் மதிப்பில்லை என்று அவர் கூறுவார். தமிழகத்தின் பிற பகுதிகளில் மதித்துப்போற்றுவது போன்று அவருக்கு அவர் ஊரில் சிறப்பில்லையாம். அவர் வெளியில் சென்றுவிட்டு வரும்போது ரிக்ஷாக்காரரிடம் பூசலிடுவது சாதாரணமாம்! சென்னையில் கூட நான் அப்பண்பைக் கவிஞரிடம் கண்டேன். பின்னொருமுறை 1955இல் கவிஞரைக் கண்டேன். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அவர் பேசினார். திருக்குறளுக்குப் புத்துரை வகுத்துப் பேசினார் அவர். அவ்வுரை பற்றி அவரிடமே நேரில் கேட்டேன். திருக்குறள் உரையை ஏறத்தாழ எழுதி