பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தில் எழுதிய ஓவியம் ஒவியர்: வேணுகோபால சர்மா இன்று எல்லா அரசியல் அலுவலகங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும், பொதுமன்றங்களிலும் பேருந்துகளிலும் கம்பீரமாகக் காட்சி தரும் திருவள்ளுவரின் திருவுருவப் படத்தை எழுதி, அதற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற புகழ் மிக்க ஓவியர் திருவாளர் வேணுகோபால சர்மா. இளமைப் பருவத்தில் விகடகவியாகக் கருநாடகக் கத்வார் சமஸ்தானத்திலும், ஆந்திராவின் புங்கனுளர் சமஸ்தானத்திலும் விளங்கியவர்: போலச்செய்யும் ஆற்றல் (Mimicry) கைவரப் பெற்றவர்; இசைப்புலமை யும் நடிப்பாற்றலும் மிக்கவர்; பல்துறை அறிஞர். பாவேந்தரிடம் உள்ளங் கலந்து பழகிய உணர்ச்சி மிக்க நண்பர். பாவேந்தரைப் போலவே உறுமும் குரல் படைத்தவர். பாவேந்தரைப் பற்றிப் பேசும்போது இவர் பேச்சு, உணர்ச்சி, மெய்ப்பாடு யாவும் பாவேந்தரை நேரில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. பாவேந்தரைப் பற்றி வேறு யாரும் கூறாத மிக நுணுக்கமான செய்தி களை நினைவில் நிறையத் தேக்கி வைத்திருக்கிறார். அச்செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை. பாவேந்தர் பாரதிதாசன் ஒரு மகாகவி மட்டுமல்லர்; பெரிய மேதை ஒப்பற்ற கலைஞர். என் வாழ்நாளில் நான் கண்டு பழகிய மேதைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். அவரோடு எனக்கு ஏற்பட்ட உறவை எனக்கு வாய்த்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.