பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 255 ஏறிக்கொண்டோம். பாவேந்தர் முன் இருக்கையில் காரோட்டிக் கருகில் அமர்ந்துகொண்டு போ என்றார். வண்டி புறப்பட்டது. எங்கே போகணும்? - இது காரோட்டியின் கேள்வி. போ சொல்ற - பாவேந்தர் பதில். வண்டி போய்க் கொண்டிருந்தது. மொகம்மது இப்ராகிம் கம்பனி அருகில் வண்டி போய்க் கொண்டிருந்தது. காரோட்டி மீண்டும் கேட்டான் எங்கே போகிறோம் என்று. பாவேந்தர் சிரித்தார். வண்டி எல்பின்ஸ்டன் திரைப்படக் கொட்டகையை நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் காரோட்டி எங்கே போகணும்? என்று கேட்டான். உடனே பாவேந்தர் என்னைக் காண்பித்து இவரைக் கேளு' என்று கூறிவிட்டுச் சிரித்தார். வண்டி மூர் மார்க்கெட்டை அடைந்தது. எல்லாரும் கீழே இறங்குங்க” என்றார் பாவேந்தர். நாங்கள் எல்லாரும் இறங்கினோம். எல்லாரும் எவ்வளவு காசு வெச்சிருக்கீங்க? என்று கேட்டார் பாவேந்தர். ஒருவரிடமும் காசில்லை. அருகில் நகரதுாதன் பத்திரிகை அலுவலகம் ஒருமாடியின் மேல் இருந்தது. அதன் ஆசிரியரான திருமலைசாமி பாவேந்தருக்கு வேண்டியவர். அருகில் நின்று கொண்டிருந்த நாவரசை அனுப்பித் திருமலை சாமியிடம் ரூ. 10 வாங்கி வரச் சொன்னார். திருமலைசாமி இல்லையென்று சொல்லி விட்டார். பாவேந்தருக்கு உடனே கோபம் வந்து விட்டது. பாதையில் இருந்தபடியே திருமலை சாமி என்றவனே! என்று உரக்கக் கூப்பிட்டார். திருமலைசாமி மாடியிலிருந்து எட்டிப்பார்த்தார். 'உன்னைப் போய் நான் பணம் கேட்ட பாரு! என் புத்தியை ஜோட்டால அடிக்கணும்!" என்று உறுமி விட்டு வண்டியில் ஏறினார். வண்டி மீண்டும் புறப்பட்ட இடமாகிய பா. வே. மாணிக்கநாயகர் பங்களாவை நோக்கிச் சென்றது. பெட்டியிலிருந்து பணத்தை எடுத்து மீட்டர் கட்டணம் எவ்வளவு என்று பார்த்துப் பணத்தைக் கொடுத்தார் பாவேந்தர், பாவேந்தர் வாழ்க்கையில் இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள். ஒருநாள் புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவர் வீட்டுத் திண்ணையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு பாவேந்தர் அமர்ந்திருந்தார். ஒருவன் கூடையில் முட்டை விற்றுக் கொண்டு வந்தான். 'ஏய்.. முட்டை இங்க வா!' என்று கூப்பிட்டார் பாவேந்தர். முட்டைக்காரன் வந்தான்.