பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26? கொள்கை மறவர் இரா. இராசகோபாலன் காவிரி பாயும் தஞ்சைத் தரணி கழகக் கருத்துக்கு வளவயல், அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற அரியேறுகளைப் பெற்றெடுத்த வீர விளை நிலம். திருவாளர் இராசகோபாலன் திராவிடர் கழகத் தோழர்களுள் குறிப்பிடத்தக்கவர். மாவட்டத் தலைவராகவும், தஞ்சை நகரத் திராவிடர் கழகத் தலைவராகவும் நீண்ட நாள் பணியாற்றியவர். இராணி உணவு விடுதியின் உரிமையாளர், பாவேந்தரிடம் பற்றோடு பழகியவர். நீதிக்கட்சி தமிழகத்தில் செல்வாக்கோடு இருந்த காலத்தில் நான் சிறுவன். இளமைக் காலத்தில் பட்டுக்கோட்டை அழகிரி, குப்தா, ஐயா (பெரியார்) ஆகியோர் பேச்சில் எனக்கு ஈடுபாடு அதிகம். 1937ஆம் ஆண்டு குப்தா தலைமையில் இந்தி எதிர்ப்புப் படையில் நான் சென்றேன். 1946ஆம் ஆண்டு தஞ்சைக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் கூட்டத்துக்கு ஐயாவையும், பாவேந்தரையும் அழைத்திருந்தேன். பாவேந்தரின் கம்பீரமான தோற்றமும், துணிச்சலான பேச்சும் இளைஞனாக இருந்த என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஐயாவைப் போலப் பாவேந்தரும் எஃகு உள்ளம் படைத்தவர்; நினைத்ததை அஞ்சாமல் கூறுபவர். ஐயா கூடச் சில சமயங்களில் வளைந்து கொடுப்பார்; ஆனால் பாவேந்தர் கொஞ்சங்கூட வளைந்து கொடுக்காத கொள்கை மறவர். மாரியம்மன் கோவில் கூட்டத்தில் புராணங்களில் புதைந்து கிடக்கும் ஆபாசங்களையும் முடை நாற்றம் வீசும் மூடத்தனங்களையும் சூறைக் காற்றைப் போல் சுழன்றடித்துத்