பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 265 நான் ஒலிபெருக்கி முன்நின்றவாறே இது பாகு ஆச்சு வரியை சார்ந்த இசை: பாவலர் பெருமானுக்கு மிகவும் பிடித்தமானது' என்று சுட்டினேன். கோவைப் பாடகர் அருச்சுனன் கேள்வி பாவேந்தர் அவர்கட்குப் பெரும் சீற்றத்தை உண்டு பண்ணியது என்று எண்ணுகிறேன். உடன் நிகழவிருந்த இசைத் தமிழ் மாநாட்டுத் தலைமையுரையாக இந்தப் பாகுஆசுவரி இசையின் நுணுக் கத்தையே பேசத் தலைப்பட்டார்கள். இனிய என் மென்குரலால், பெண் இழைவது போன்று பாடிக் காட்டிய என்னையும் கடந்து, அரிமாக் குரலிலே அப்பண்ணைப் பாவேந்தர் பாடிக் காட்டினார். (ஆசுவரி-விரைந்து இசைக்கும் பாட்டு.) "இந்தப் பாகு ஆசுவரிப் பண்ணை என் பாடகர் மதிவாணன் பெண் பாடுவது போன்று பாகாய் இழைத்துக் காட்டினார். சர்க்கரையைப் பாகாய்க் காய்ச்சும் போது அதன் கண் ஒர் இழை தோன்றுவதுபோன்று, இப்பண்ணை இழைக்கும்போது அதிலே தோன்றும் மெல்லிய எடுப்பின் ஒசை (இதை அம்மிங் என்பர்) எல்லாரையும் மயக்கிவிடுவதால்தான் இது பாகு ஆசுவரி என்ற இனிய தமிழிசைக் கூறினைப் பெற்றிருக்கிறது - இந்த இசைதான்நம் பழந்தமிழ்ப் பாணர்களால் பெரிதும் விரும்பிப் பாடப்பெற்றதாக இசை கூறுநூல்கள் இயம்புகின்றன. இந்தப் பாகு ஆசுவரிதான் காலத்தால் கடைப்பிடிப்பாரற்றுச் சற்று இனிமை மரீஇ. பெயர் மரீஇ. 'பாகேசுவரி என்று கர்நாடக இசையில் இடம் பெற்றுவிட்டது. "இங்குள்ள தமிழ்ப் பண்களையெல்லாம் வடநாட்டார் தமதாக்கிக் கொண்டு உருமாற்றி, பொருள்மாற்றிக் கொண்டு வந்து கோயில்களில் அமர்த்தியுள்ள குட்டிக் கடவுள்களின் பெயரால் கர்நாடக சங்கீதராகம் என்று விளம்பரப்படுத்துகின்றனர். அப்படி மாறி வழங்குவதுதான் 'பாகேசுவரி என்ற கர்நாடக இசைப்பண். இங்குள்ள இசையாளர்கள் இதைப் புரிந்து கொள்வது சாலச்சிறந்த ஒன்றாகும். இப்படித்தான் தமிழில் உள்ள பல துய சொற்றொடர்கள் பிற மொழியாளரால் கவர்ந்து செல்லப்பட்டு, உருமாறி வட சொல்லென்று நம்மிடையே திணிக்கப்படுவதும், அக்கூற்றினை ஏற்று இங்குள்ள முண்டங்கள், கூத்தாடுவதும் இன்று கொடுஞ் செயலாயிற்று. நிருத்தம்' என்ற சொல் ஆடலைக் குறிக்கும். ஆடும்போது வெளியிடும் முத்திரைகள் உள்ளத்தின் கூறுகளை வெளிக்கொணர்ந்து நிறுத்திக் காட்டுவதால் நிறுத்தம்' என்று குறிக்கப்பட்டுப் பின் நிருத்தம் ஆயிற்று. ஆடல் புரியும் ஒருத்தி கை,