பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 267 ஒருவாறாக உள்ளத்தைத் தேற்றிக்கொண்டு எதிரில் போய் நின்றேன். "வாரும். எல்லாரும் நலந்தானே?" என்றார் பாவேந்தர். "ஆம் நலந்தான்!” என்று கூறிக்கொண்டே, கொண்டு போன கடிதத் தாள் கட்டுகளை அவர்முன் வைத்தேன். அவருடைய பார்வை என்னை ஏதோ ஏசுவதாகப்பட்டது. மூக்கின் வழியாக வந்த சுருட்டுப் புகைச்சலோடு, “அதோ அந்த மலையாளத்தான் கடைக்குப் போய் இரண்டு தேநீர் கொண்டுவரச் சொல்லிவாரும்” என்று கூறினார். அவ்வளவுதான். தேனிர்க் கடைக்குப் போய் வருவதற்குள் அவர் எதிரில் நான் வைத்திருந்த அத்துணைக் கடிதத் தாள்களையும் சுக்கு நூறாகக் கிழித்து முட்டாக வைத்திருந்தார்கள். அருகில் நான் வந்ததும் இந்தா என்று தீப்பெட்டியை நீட்டினார்கள். ஏன்? என்றேன். இவற்றைக் கொளுத்து என்றார் பாவேந்தர். புரியாமல் திகைத்தேன். “என்ன புரியலையா? நீ பிழைபட எழுதிய பாட்டுக்குத்தான் இந்தத் தண்டனை. முதலில் இவற்றைக் கொளுத்திவிட்டு அதோ (மேசையைக் காட்டி) நீ எழுதிய அஞ்சல் தாளில் உள்ள அச்சுக் கவிதையைப் படி என்றார்கள்; படித்தேன். தாய்மொழி தமிழ்மொழி என்போம்-செப்பும் தமிழை சிதையாது காப்போம். இதுதான் தாளில் உள்ள அச்சுக்கவிதை, "பாட்டைப்பார்! சந்திப்பிழையோடு பாட்டெழுதித் தமிழைச் சிதைத்திருக்கிறாய்! செப்பும் தமிழை(ச்) சிதையாது காப்போம் என்றல்லவா எழுதவேண்டும்! ஐகாரத்துக்குப்பின் ஒற்று மிகுமே. ஒற்றுப்போடாமல் தமிழின் உயிரைக் கெடுத்திருப்பது மட்டுமல்லாமல் இதைப் பலரும் அறிய இவ்வளவு கடிதத் தாள்களிலும் ஏன் அச்சிட்டாய்? ஆகவேதான் கொளுத்தச் சொன்னேன்" என்று கூறி எழுந்து போய்விட்டார்.