பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 269 மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் எழுதிய வேறு பாடல்களையும் இசையமைத்துப் பாடிக் காட்டும்படி அடிக்கடி கேட்பார்; நானும் பாடுவேன். வாழ்க வாழ்கவே! என்று திராவிட நாட்டை வாழ்த்திப் பாவேந்தர் எழுதிய பாடல் இசைக்குயில் எம்.எல். வசந்தகுமாரியால் பாடப்பட்டுத்தமிழகத்தில் பெருத்த விளம்பரம் பெற்றதை யாவரும் அறிவர். இந்தப் பாடல் தோன்றுவதற்கு மூலகாரணம் நான்தான். நாடகத்தில் முதலில் கோரஸ் பாடுவதற்கு நல்ல பாடலொன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று நானும் என் நாடக நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பாடலைப் பாவேந்தர் எழுதிக் கொடுத்தார். 24.8.40இல் திருவாரூரில் நீதிக்கட்சி மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முதன் முதலாக இப்பாடல் அரங்கேற்றப்பட்டது. மாநாடு முடிந்து சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். அறிஞர் அண்ணாவும், இளந்தாடி நெடுஞ்செழியனும் நான் பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் இப்பாடலைப் பாடும்படி இருவரும் என்னை விரும்பிக் கேட்டனர். சேலம் வருவதற்குள் குறைந்தது பத்து முறையாவது அவர்களுக்கு இப்பாடலைப் பாடிக் காட்டியிருப்பேன். பாவேந்தர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடும் இயல்புடையவர். எப்போதும் தனியாக அமர்ந்துண்ணும் பழக்கம் இவருக்குக் கிடையாது; நண்பர்கள் குழாத்தோடுதான் சாப்பிடுவார். எது சாப்பிட்டாலும் ஒன்றே! மீனென்றால் மீன்; கறியென்றால் கறி. எதையும் நிறையச் சாப்பிடுவார். 'என்னப்பா! அள்ளிக் கிட்டுவா! வாரிக்கிட்டு வா!' என்று தான் உண்ணும்போது இவர் கட்டளை யிடுவார். சேலத்தில் மாடர்ன் கேஃப் சிற்றுண்டியும், வில் வாத்திரிபவன் காஃபியும் இவருக்கு மிகவும் பிடிக்கும். இட்டிலி சாப்பிடும்போது எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் கரண்ட் சட்னி (காரமான புளி மிளகாய்ச் சட்னிக்குப் பாவேந்தர் வைத்த பெயர்) கட்டாயம் இவருக்கு வேண்டும். மூர்மார்க்கெட் பானுரெஸ்டாரண்டில் வான்கோழி பிரியாணி சாப்பிடுவார். ஆடு மனிதனுக்கு substitute என்பார். ஆட்டின் எந்த உறுப்பை மனிதன் சாப்பிடுகிறானோ, அந்த உறுப்பு மனிதனுக்கு வலிமை பெறும் என்று கூறுவார். பாவேந்தர் சிறந்த சுவைஞர். ஒவியர்கள் ஸ்டுடியோவில் படங்கள் எழுதுவதை எப்போதும் கண்கொட்டாமல் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருப்பார். முழங்கையைத் தலையணையில் ஊன்றிய வண்ணம் ஊம். எழுதிக்க என்பார்; நாங்கள் எழுதுவோம்.