பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைத்தாலே இனிக்கும் நாட்கள் பாவேந்தர் பெரிய பொதுவுடைமை வாதி. கையில் காசிருந்தால் கேட்பவர்க்கெல்லாம் கொடுத்து விடுவாா. ஒருமுறை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் தமது படத்துக்குப் பாட்டெழுதியதற்காக ரூ. 4000/- பாவேந்தருக்குக் கொடுத்தார். அப்பணத்தில் நூறு ரூபாயைத் தமது பணியாளனிடம் கொடுத்து 'இந்தா! இதை இன்னைக்குச் செலவுக்கு வெச்சுக்க. மீதி கொண்டாராதே! என்று கூறியதை நான் அருகில் இருந்து கேட்டேன். இதுபோல் எத்தனையோ நாட்கள்: ரிக்ஷாவில் ஏறி நாள் முழுதும் சுற்றிவிட்டு, ரிக்ஷா இழுப்பவனுக்குப் பத்தோ இருபதோ தாராளமாகக் கொடுப்பார். கவி காளமேகம் படப்பிடிப்பின்போது கையில் காசு தாராளமாக இருக்கும் நேரத்தில் எல்லாரையும் காரில் போட்டுக் கொண்டு எலியட் பீச்சுக்குப் போவார். கடற்கரையிலேயே விருந்துக்கு ஏற்பாடு செய்வார். காலியான மதுப்புட்டியில் கார்க்கை அடைத்துக் கடலுக்குள் வீசுவார். அலைமீது மிதக்கும் அப்புட்டியை நாங்கள் நீந்தி எடுத்துக் கொண்டு வரவேண்டும். பாவேந்தரோடு பழகிய நாட்கள் நினைத்தாலே இனிக்கும் நாட்கள். கவிகாளமேகத்தில் பாவேந்தர் எழுதிய சில திரைப்படப் பாடல்கள்: 1 வண்மை சேர்தமிழ் நாடெங்கள் நாடு வாழ்த்துவோம் அன்போடு (வண்மை) திண்மை யாகிய தோள்வீரர் திங்கள் முகங்கொள் பெண்கள் வாழும்நாடு. (வண்மை) பூரிக்கும் தமிழ்க் கவிதை வாழ்வினுக் கதே.ஜீவன் பாருக்கே இன்பம் பாவிக்கும் பழநாடு வாழ்வின் பயன்சொன்ன நாடு. சந்தனம் ఇDు శ్రీవి சந்தப் பறவையின் கீதம் சிந்தையில் பொங்கும் ஆனந்தம் செந்நெல் வயல் சிறக்கின்ற நாடு. வண்ணம் பாடியே நடக்கும் வைகை காவிரி பெண்ணை தண்ணருந் தென்றல் பூஞ்சோலை சாகாத இன்பம் தழைக்கின்ற நாடு. (வண்மை)