பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 273 பயிற்சியும் எனக்குண்டு. யமகம், திரிபு, சிலேடை, சந்தம் ஆகிய சொல் விளையாட்டுக்களில் வியப்பும் விருப்பமும் எனக்குண்டு. இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி, பாரதிதாசன் பாடல்களை நான் அவ்வளவாக மதித்ததில்லை. புரியும்படி எளிய சொற்களால் எழுதப்பட்ட இவர்கள் பாடலை வெள்ளைப்பாடல்கள் என்று வெறுத்து ஒதுக்குவது என் வழக்கம். பாவேந்தரைச் சந்தித்தபோது எனக்கு முப்பது வயதிருக்கும்; சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை இலாகாவில் நல்ல சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாவேந்தரின் இன்ப இரவு நாடகம் சேலம் சென்ட்ரல் டாக்கீசில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பாவேந்தர் ஒரு நாள் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். என்னுடைய கவிதை நூல்களைப் படித்திருக்கிறாயா என்று என்னைக் கேட்டார். நான் அவர் கவிதை நூல்களைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்றாலும் சிலவற்றைப் படித்திருப்பதாகத் தலையசைத்தேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திலிருந்து அப்போது வெளியாகிக் கொண்டிருருந்த சண்டமாருதம் என்ற சினிமாப் பத்திரிகை என் பொறுப்பில் இருந்தது. அப்பத்திரிகையில் வெளியிட ஒரு பாடல் தரும்படி அவரைக் கேட்டு வைத்தேன். அடுத்தநாளே அவள் மேல் பழி என்ற பாடலை எழுதி என்னிடம் கொடுத்தார். அதைப் படித்ததும் பாவேந்தர் மீது அளவு கடந்த மதிப்பும், அவர் ஆற்றல் மீது அளவு கடந்த மரியாதையும், என் உள்ளத்தில் ஏற்பட்டன. அவர் பாடல்களை விரும்பி வாங்கிச் சண்டமாருதத்தில் தொடர்ந்து வெளியிட்டேன். 1945ஆம் ஆண்டிலிருந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கும் பாவேந்தருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அபூர்வசிந்தாமணி, சுபத்ரா, சுலோசனா, பொன்முடி, வளையாபதி ஆகிய படங்களுக்குக் கதை வசனம் பாடல் எழுதினார். அவருடைய காதல் காப்பியமான எதிர்பாராத முத்தம், பொன்முடி என்ற பெயரில் திரைப்படமாவதற்குத் துணையாக இருந்தவன் நான். 'பூ' ஆண்டாள் என்ற திரைப்படத்தை நான் எடுத்தேன். அப்போது சுத்தானந்த பாரதியார் பத்திரிகைகள் மூலமாக மிக்க விளம்பரம் பெற்றிருந்த காரணத்தால், அவரை அப்படத்திற்குப் பாட்டு எழுதக் கேட்டுக் கொள்வதற்காக நான் புதுச்சேரி சென்றேன். சுத்தானந்த பாரதியார் அப்போது அரவிந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவருடைய கீர்த்தனைகள் சில அப்போது இசையுலகில் எல்லாராலும் பாடப்பட்டு மிக்க விளம்பரம் பெற்றிருந்தன. ஆண்டாள் படத்துக்குச் சில பாடல்கள் எழுதித் தரும்படி அவரை