பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 அவள்மேல்பழி நான் கேட்டேன். 150 பாடல்கள் அடங்கிய ஒரு காகிதக் கட்டை என் முன்னால் எடுத்துப் போட்டு இவற்றிலிருந்து தேவையான வற்றைப் பொறுக்கிக் கொண்டு போ என்று சொன்னார். மூன்று பாட்டை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை அவருக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். புதுச்சேரி வந்துவிட்டுப் பாவேந்தரைப் பார்க்காமல் செல்லக் கூடாது என்று எண்ணி அவர் வீட்டுக்குச் சென்றேன். என்னிடம் மிக்க அன்போடு பழகினார். இதற்கு முன் என்னை அவர் தம்பி என்று அழைத்ததில்லை. ஆனால் இப்போது தம்பி! தம்பி!' என்று நொடிக்கொரு தரம் அவர் அன்பொழுக அழைத்தார். புதுவையில் இரண்டு நாள் தங்கிச் செல்லுமாறு வற்புறுத்தினார். இதில் ஏதோ விசயம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு நானும் இரண்டு நாள் தங்கினேன். அவருடைய காதற் காப்பியமான எதிர்பாராத முத்தத்தை எடுத்து என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்; படித்துப் பார்த்தேன். திரைப்படத்துக்கு மிகவும் ஏற்ற கதை டி.ஆர். சுந்தரத்தைக் கலந்து கொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்றேன் நான். “என்ன நான்கு... ஐந்து ரூபாய் வாங்கித் தருவியா?” என்று கேட்டார். 'முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு எதிர்பாராத முத்தத்தோடு சேலம் திரும்பினேன். சேலம் வந்ததும் அன்றே டி.ஆர்.எஸ்.ஸைச் சந்தித்து எதிர்பாராத முத்தம் கதையை எடுத்துச் சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ரூ.10,001 கொடுப்பதாகச் சொன்னார். அப்படத்துக்குப் பாவேந்தரே வந்து வசனம் எழுதினார். அப்படம் ஒரு திரைக்காவியம்! சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று! அவர் எழுதிய ‘சுபத்ரா வின் திரைக்கதை வசனம் புத்தகமாக வெளிவந்து டிமாண்டாக விற்றது. அந்நூலை நான்தான் எடிட்' செய்தேன். - பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸில் சுலோசனாவுக்கு வசனம் எழுதியபோது சில சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுலோசனா இந்திரஜித்தின் மனைவி. அப்போது நடிகர் சின்னப்பா புகழேணியின் உச்சியில் இருந்த நேரம். அவர் நடித்த கண்ணகி, மனோன்மணி, ஜகதலப்ரதாபன் போன்ற வெற்றிப் படங்கள் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. இந்திரஜித் வேடத்தில் நடிக்கச் சின்னப்பாவும், சுலோசனா வேடத் தில் நடிக்க கே.எல்.வி. வசந்தாவும் புக் செய்யப்பட்டிருந்தனர். சின்னப்பாவுக்குரிய தொகை ரூ. 5,0000 முன் பணமாக ரூ.10,001 அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.