பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அவள்மேல்பழி நடிகர்களையும் அடே' என்று தான் திட்டுவார். சின்னப்பா கோபித்துக் கொண்டு போய்விட்டார். பிறகு அவர் மாடர்ன் தியேட்டர்ஸுக்குள் நுழையவில்லை. சின்னப்பா வீரவசனம் பேசி நடிப்பதில் மிகவும் வல்லவர். அவரை உள்ளத்தில் நினைத்துக் கொண்டுதான் இந்திரஜித்துக்கு பாவேந்தர் வசனம் எழுதியிருந்தார். சின்னப்பா போனபிறகு அப்பாத்திரத்திற்கு யாரைப் போடுவது என்பது பெரும் பிரச்சனையாகிவிட்டது. கடைசியில் டி.ஆர்.எஸ். தாமே இந்திரஜித் பாத்திரத்தை ஏற்று நடிக்க முடிவு செய்தார். பாவேந்தருக்கு இந்த முடிவு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அவர் நேராக டி.ஆர்.எஸ். அலுவலகத்திற்குச் சென்று நீதான் ஹீரோ பண்ணப் போறயாமல்ல?” என்று கேட்டார். அவரும் ஆ. மா என்றார். டி.ஆர்.எஸ்.ஸை நீ என்று ஒருமையில் பேசும் தகுதி பாவேந்தர் ஒருவருக்குத்தான் இருந்தது. வேறு யாரும் அவரை நீ என்று ஒருமையில் சொல்லி நான் கேட்டதில்லை. டி.ஆர்.எஸ்.ஸை சந்தித்த பிறகு பாவேந்தர் வெளியில் வந்தார். நானும் அவரும் மெதுவாக ஸ்டுடியோ வாயிலை நோக்கிப் பேசிக் கொண்டே நடந்தோம். டி.ஆர்.எஸ். தமிழை ஆங்கில பாணியில் பேசிப் பழக்கப்பட்டவர். அவர் பாவேந்தரின் சந்தத் தமிழைப் பேசினால் எப்படியிருக்கும்? பாவேந்தர் சொன்னார்; "இந்திரஜித் மண்டோதரியின் வயிற்றிலிருந்து பிறந்து வெளியே வந்ததும் அழுதான். அவன் அழுத குரல் இடிஇடிப்பது போல இருந்தது. அக்குரலைக் கேட்டுத் தேவர்களெல்லாம் அஞ்சி நடுங்கி ஒடி ஒளிந்தனர். அவ்வளவு Harshtone! இவ (டி.ஆர்.எஸ்) எப்படி என் வசனத்தைப் பேசித் தொலைக்கப் போறானோ?” என்று கூறி வருத்தப்பட்டார். அவர் எதிர்பார்த்தபடி தான் நடந்தது. இந்திரஜித் இராவணனிடம் பேசும்போது வெள்ளைக்காரப் பாணியில் தா...ந்தையே! என்று தான் திரைப்படத்தில் அழைத்தான். அப்படத்தில் தந்திரக் காட்சிகள் மிக அருமையாக எடுக்கப்பட்டிருந்தன, என்றாலும் படம் தோல்வியடைந்தது. பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸுக்குக் கடைசியாக எழுதிய படம் வளையாபதி. பாவேந்தரின் நீண்ட வசனங்களைக் கதாநாயகனாக நடித்த முத்துகிருஷ்ணனால் (பின்னர் வளையாபதி முத்துகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார். பேச முடியவில்லை. அப்படத்தின் இயக்குநரான ரகுநாத் அவ்வசனத்தைச் சில இடங்களில் இவரைக் கலக்காமலே வெட்டி (cut short) விட்டார். இச்செய்தி பாவேந்தர்