பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 291 அருகில் அன்பர் ஒருவர் எழுந்திருக்காதீர்கள்! இங்கேயே போகலாம்!” என்று கூறித் தடுத்தார். பாவேந்தருக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. "ஏ! நீ யார் என்னைத் தடுக்க! மரியாதையைக் கெடுத்துக்காதே!” என்று அந்த நிலையிலும் சத்தம் போட்டார். பாவேந்தர் பிறரை அதட்டியே பழக்கப்பட்டவர். அவரை யார் அதட்ட முடியும்? பிறகு அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து மெதுவாகப் பாத்ருமுக்கு அழைத்துச் சென்றனர். அன்றே அவர் ஆவி பிரிந்தது. புதுவைக் குயிலின் குரல் ஒடுங்கியது. பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுபத்ரா'வுக்கு வசனம் எழுதினார். போருக்குப் புறப்பட்ட காதலன் அருச்சுனனைச் சுபத்ரா வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அருகில் இருந்த அவள் அரண்மனைத் தோழி, அதை ஒர்நாள் நினைவு கூர்ந்து ‘சுபத்திரை! அன்று போருக்குச் சென்ற பார்த்தனை, நீ வைத்த கண் வாங்காமல் பார்த்தனை! என்று குறிப்பிடுகிறாள். இந்த வரிகளைக் கேட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன. என்றாலும் இன்றும் அவ்வரிகள் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.