பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தமிழ்த் தமையன் திருமதி மஞ்சுளாபாய் திருமதி வை.சு. மஞ்சளா பாய் அம்மையார் மராட்டிய ராவ்ஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் தஞ்சை மராட்டிய மன்னர்அரண்மனையில் மெய்க் காப்பாளர் தலைவராகப் பணிபுரிந்தவர். அப்பதவிக்கு Dignity Inspector என்பது அன்றைய பெயர். ஏழுவயதில் திருமணமாகி இளமையிலேயே கணவனை இழந்த இவர், சுயமரியாதை இயக்கத்தோடுத் தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கம் இவரையும் செட்டி நாட்டுச் செல்வர் வை. சு. சண்முகம் செட்டியாரையும் காதலால் இணைத்தது. கவிதை பாவேந்தரையும் இவரையும் சகோதர பாசத்தால் இணைத்தது. திருச்சிராப்பள்ளி பெரியார் பயிற்சிப் பள்ளி மாணவியர் விடுதிப் பொறுப்பாளராக இருக்கும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளை உணர்ச்சியோடு இக்கட்டுரையில் கூறியிருக்கிறார். 1936ஆம் ஆண்டு, இளமையில் கணவனை இழந்து, சமுதாயக் கொடுமையென்னும் சூறாவளியில் சிக்கி, பாய்மரம் உடைந்த மரக்கலம் போல் வாழ்க்கை அலை மலையில் திக்குத் தெரியாமல் மிதந்து கொண்டிருந்த என்னைச் சுயமரியாதைத் தென்றல், ஈரோடு நாகம்மாள் காலனித் துறைமுகத்தில் கொண்டுவந்து சேர்த்தது. சமுதாயக் கொடுமைகளால் நைந்து போயிருந்த எனக்குச் சுயமரியாதை இயக்கம் ஏற்ற புகலிடமாய் அமைந்தது. ஒரு பெண் தன்மதிப்போடும் பாதுகாப்போடும் வாழ நாகம்மாள் காலணியை