பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தமிழ்த் தமையன் பாவேந்தருடைய முத்தமிழையும் இன்ப இரவு' என்ற பெயரில் அது நாடகமாக அரங்கேற்றம் செய்தது. 1944ஆம் ஆண்டு பாவேந்தரின் மூத்தமகள் சரசுவதியின் திருமண முயற்சிகள் நடைபெற்றன. இம்முயற்சியில் எனக்கும் கணிசமான பங்கு உண்டு. மணமகன் கண்ணப்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்; சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபாடு மிக்கவர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நான் நேராகப் புதுவை சென்று பாவேந்தரைப் கலந்து கொண்டு சிதம்பரம் சென்றேன். அன்பழகன் அப்போது மாணவர் என்று எண்ணுகிறேன். அன்பழகன் வீட்டுக்குக் கண்ணப்பரை வரச்சொல்லி நேரில் பார்த்தேன்; அழகும் அடக்கமும் மிக்க இளைஞராக அவர் விளங்கினார். பார்த்தவுடன் அவரை எனக்குப் பிடித்து விட்டது. அவருடைய இசைவைக் கேட்டுக் கொண்டு பெண் பார்க்கும் அடுத்த கட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன். புதுவையில் பெண் பார்க்க நாளும் குறிக்கப்பட்டது. என் சுமையைச் (நகைகள்) சரசுவதியின் உடம்பில் ஏற்றி அவளை அலங்கரித்தேன். கண்ணப்பர் வந்தார்; பெண்ணுக்கும் பிடித்தது. பெண்ணும் கண்ணப்பர் கண்ணுக்குப் பிடித்தது. திருமணம் உறுதி செய்யப் பட்டது. மாப்பிள்ளை கண்ணப்பர் கரூருக்குப் பக்கத்தில் உள்ள கட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர். நிலபுலன்களோடு கூடிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பிள்ளை. அவர்களுடைய பதிவுத் திருமணம் திருச்சியிலும், பாராட்டுக்கூட்டம் கட்டிப்பாளையத் திலும் நடைபெற்றது. பாராட்டுக் கூட்டத்துக்குச் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் தலைமை தாங்கினார். பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வேறு பல இயக்கத் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். இத்திருமணத்தில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்ணுலகுக்கு நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். பாவேந்தர் மூத்த மகள் சரசு தந்தையிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவருக்குப் பணிவிடைகள் புரிந்தவள். ஒரு வீட்டில் ஆண்கள் எவ்வளவு சீர்திருத்தக்காரர்களாக இருந்தாலும் பெண்கள் கட்டுப்பெட்டிகளாகவே இருப்பர். அவர்களுக்கு அடுப்பே திருப்பதி, ஆம்படையானே குல தெய்வம்” வேறு சமுதாயச் சிந்தனைகள் அவர்களை அவ்வளவாகப் பாதிப்ப தில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டுச் சீர்திருத்தச் சிந்தனையில்