பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 -தமிழ்த்தமையன் நடைபெற்றது. ஆனால் நடுவில் சில குழப்பங்கள் ஏற்பட்டுச் சிறிய அளவில் திருவானைக்காவல் சத்திரம் ஒன்றில் 30.4.1951இல் அவ்விழா எடுக்கப்பட்டது. திருவானைக்காவலிலிருந்து எங்கள் குடும்பம் மீண்டும கானாடு காத்தானுக்குத் திரும்பியது. எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நொடிப்புகள், துன்பங்கள் எங்களை இன்ப நிலையத்திலிருந்து வெளியேற்றின. எனது பொது வாழ்க்கை ஈடுபாடு குறைந்தது. பாவேந்தருடைய தொடர்பும் குறைந்தது. அன்புக்குரிய என் கணவரையும், தகுதிமிக்க தமிழ்த் தமையன்ையும் பிரிந்து தனித்திருக்கும் இவ்வேளையில், அவர்களுடைய பழைமை நினைவுகள் என் கண்களை அடிக்கடி பனிக்கும்படி செய்கின்றன. என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டு பெரிய மேதைகளுள் ஒருவர் பெரியார்; மற்றொருவர் பாவேந்தர்.