பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 என் அறிவுத் தந்தை பாரதி சுவாமிநாதன் பாவேந்தர் கவிதைக்குத் தமிழகமெங்கும் சுவைஞர் களும் சுற்றத்தார்களும் உண்டு; அச்சுற்றத்தாரில் சிலர் பாவேந்தரைத் தந்தையாக மதித்து நடந்து கொண் டனர். சிலர் உடன்பிறந்த தமையனாக மதித்து நடந்து கொண்டனர். இப்பட்டியல் தமிழகமெங்கும் உண்டு. மதுரைப் புத்தகக்கடை உரிமையாளர் பாரதி சுவாமி நாதன் பாவேந்தரின் இலக்கியக் குடும்பப்பிள்ளை. தந்தைக்குரிய பாசத்தோடும் உரிமையோடும் பாவேந்தர் இவரிடம் பழகி வந்திருக்கிறார். பாவேந்தரின் இதய வீணையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ற நரம்பின் வித்தியாசமான அதிர்வுகளையும் குறிப்பிடத்தக்க குடும்ப நினைவுகளையும் சுவைபடச் சுட்டிக் காட்டுகிறார் சுவாமிநாதன் இக்கட்டுரையில். 1949ஆம் ஆண்டு பாவேந்தர் மதுரை வந்தார். பாரதிதாசன் மன்றம் நடத்திய திருக்குறள் வகுப்பில் சொற்பொழிவாற்றுவதற்காக வந்தார். அம்மன்றத்தில் நான் ஒர் உறுப்பினன். அப்போது ஏற்பட்ட தொடர்பு அவ. இறக்கும் வரையில் நீடித்தது. மதுரை வந்தால் வழக்கமாக சங்கர்&கோ மருந்துக் கடை மாடியில் தங்குவார். என் பேரில் அவருக்கு ஒர் ஈடுபாடு. மதுரையில் தங்கும்போது என்னை வந்து பார்ப்பார்; அடிக்கடி வெளியே கூட்டிக் கொண்டு போவார். மதுரையிலும் திருச்சிராப்பள்ளியிலும் மேற்கொண்ட மணிவிழா முயற்சிகளில் எனக்கும் பங்குண்டு. 1953 ஆண்டு ஏப்ரல் திங்கள் 5ஆம் நாள் எனக்குத் திருமணம். காதல் மணம்; கலப்பு மணம். டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் திருமணத்தை நடத்த விரும்பினேன். அப்போது மு.வ. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அ.கி.