பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 என் அறிவுத்தந்தை பரந்தாமனார் தலைமையில் நடத்திக் கொள்ளும்படி கூறிவிட்டார். ஆனால் மதுரை முத்துவும், தங்கப்பழமும், பாரதிதாசன் தலைமைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினர். பாவேந்தரும் தலைமை தாங்க ஒத்துக் கொண்டார். திருமணம் இனிது நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமக்களாகிய எங்களை மதுரை முத்து தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். 1957ஆம் ஆண்டு 'பாரதி புத்தக நிலையம் என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்று துவக்கினேன். அத்திறப்பு விழாவுக்குத் தலைவர் பாவேந்தர். திறப்பாளர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். திருச்சி மணிவிழாவின் போது பாவேந்தருக்கும், கி.ஆ.பெ. அவர் களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்து, அக்கருத்து வேறு பாட்டால் பிரிந்திருந்த அவர்கள் என் கடை திறப்பு விழாவில் மீண்டும் கூடினர். திறப்பு விழா முடிந்ததும் ரீகல் டாக்கீசில் இரண்டு பேரும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க" என்பது முத்தமிழ்க் காவலர் தலைப்பு: “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது பாவேந்தர் தலைப்பு. நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். முத்தமிழ்க் காவலர் முதலில் பேசினார். பேசி முடிந்ததும் நான் சைவன்! எனக்கு முதலில் சோறுபோடு' என்று சொல்லிவிட்டுச் சாப்பிடப் போய்விட்டார். அவர் புறப்பட்டுப் போனதும், "கி.ஆ.பெ. விசுவநாதம் அனாபைசா கணக்குப் பார்க்கக் கூடியவர். நான் என்ன பேசி விடுவேனோ என்ற பயம். அதனால் தான் முன்னாலேயே புறப்பட்டு விட்டார்” என்று கூறினார் பாவேந்தர். மதுரை வந்தால் தொடர்ந்து 15 அல்லது 20 நாள் என் வீட்டில் தங்கியிருப்பார். என்னை அவருடைய மகனாகப் பாவிப்பார். வீட்டிற்குள் நுழைந்ததும் என் மனைவியைப் பார்த்து தம்பி வந்துட்டானா? என்று பரிவோடு கேட்பார். என்னைக் கண்டதும் 'அய்யா! வாய்யா!' என்று அன்பொழுகக் கூப்பிடுவார். பாவேந்தர் மதுரையில் இருக்கிறார் என்ற செய்தி தெரிந்தால் எப்போதும் என் வீட்டில் பத்து இருபது பேர் கூடிவிடுவர். எல்லாருக்கும் விருந்து நடக்கும். மீன், கறி, புறா சூப் விரும்பி அவர் உண்ணும் உணவுகள். ரசத்திலே மோர்விட்டுக் குடிப்பார்; முட்டை நிறையச் சாப்பிடுவார். இரவில் கடுக்காக மிளகு ரசம் கேட்பார். இடியாப்பம் அவருக்கு நிறையப் பிடிக்கும். இந்தோ-சிலோன் ஒட்டலுக்கு அடிக்கடி போவோம். அங்கு கைம்மா விரும்பிச் சாப்பிடுவார். என் மனைவி டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியப்