பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чпвоѣѣй-есѣшвозяреозаранѣ 303 அவருக்கு மட்டும் முட்டை அவித்துத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது; அறைக்குள் செனறு சாப்பிட்டார். திருமணத்துக்கு மறுநாள் அவரைப் புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் முன்னணியின் சார்பில் நிற்கும்படி வற்புறுத்தினர். இந்தத் தொகுதியில் பாவேந்தர் நிற்பதுதான் சரி என்று புதுவை சுப்பையாவும் சொல்லி அனுப்பினார். தேர்தலுக்கு நிற்கலாமா? வேண்டாமா? என்று பாவேந்தர் உள்ளம் ஊசலாடியது. என்னை அபிப்பிராயம் கேட்டார். தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றால் கையெழுத்து போடுங்கள் என்றேன். போட்டார்; வெற்றியும் பெற்றார். இராமநாதபுரம் புலவர் குழுவுக்குப் போய்விட்டுப் பாவேந்தர் வயிற்றோட்டத்தோடு மதுரை வந்தார். டாக்டர் மா. இராசமாணிக்கனார் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஊசி போட்டோம். வயிற்றோட்டம் குறைந்தது; நிற்கவில்லை. டாக்டர் காமேஸ்வர னிடம் சீட்டு வாங்கிக் கொஞ்சம் பிராந்தி வாங்கிக் கொடுக்கச் சொன்னார். எனக்கு ஊசி வேண்டாம். கொஞ்சம் குடிச்சாச் சரியாப் போயிடும் என்று பல தடவை குழந்தை போலக் கேட்டார். 'மதுவா! அது மட்டும் உங்களுக்கு நான் வாங்கிக் கொடுக்க மாட்டேன். என் அப்பா குடியாலேயே என் குடும்பத்தைக் கெடுத்தார்" என்று சொல்லிக் கட்டாயமாக மறுத்துவிட்டேன். "சரி சரி. டிக்கெட் வாங்கிக்குடு. நான் ஊருக்குப் போறே" என்று கோபமாகக் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். ஊருக்குப் புறப்பட்டு விட்டார். பாவேந்தர் கடைசியாக மதுரை வந்தபோது மனைவியோடு வந்தார். பழனியம்மாள் மீனாட்சியம்மன் கோவிலைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். பாவேந்தர் என்ன சொல்லுவாரோ? என்ற அச்சம் எனக்கு. அப்பா அனுமதிக் கொடுத்தால்தான் அழைத்துப் போவேன்' என்று சொல்லிவிட்டுப் பாவேந்தர் முகத்தைப் பார்த்தேன். “அழைச்சுப் போ! என்னை ஏன் பாக்கற. இவ ஒரு சாமியைவிட மாட்டா. எத்தனை துணுன்னு எல்லாத் துணையும் எண்ணிட்டு வந்திடுவா. எல்லாத்துணையும் காட்டு” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதன்பிறகு நான் அழைத்துச் சென்றேன். 1. சுவாமிநாதன் பாவேந்தரை அப்பா என்று தான் அழைப்பது வழக்கம்.