பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 34 வேண்டும்" என்று அறிவுரை கூறினார். பிறகு விடை பெற்றுக் கொண்டு எல்லாரும் திரும்பினோம். இதுவே பாவேந்தருக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு. இரண்டாம் முறையாகப் பாவேந்தரைப் பார்த்தது சேலத்தில். தமிழகப் புலவர் குழு 25.9.1960இல் சேலம் வந்திருந்தது. சேலம் நீதிக்கட்சிப் பிரமுகர் திருவாளர் பி. இரத்தனசாமிப்பிள்ளை தம்முடைய மாமாங்கம் தோட்ட மாளிகையில் புலவர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்தார். மாலையில் சேலம் திருவள்ளுவர் கழகம் புலவர் குழுவுக்கு ஒரு வரவேற்பு வழங்கியது டாக்டர் மு.வ. அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி எங்கள் நகரவைப் பள்ளி மைதானத்தில் போடப்பட்ட பெரிய மேடையில் நடைபெற்றது. புலவர் குழுவில் ஒரு வழக்கமுண்டு. புலவர் குழுவில் உள்ள நாற்பது பேரும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேச முடியாது. எனவே ஒவ்வொரு கூட்டத்திலும் சீட்டுப் போட்டுப் பத்துப்பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் மட்டுமே பேசுவார்கள். கூட்டம் தொடங்கியது. சேலம் திருவள்ளுவர் கழகத்தின் ஆசிரியரான புலவர் நடேச உடையார் வரவேற்புரை வழங்கினார். பிறகு தேர்ந்தெடுக்கப்ட்ட பத்துப் புலவர்களும் பேசினர். அப்புலவர் களுள் பாவேந்தர் இடம் பெறவில்லை. கூட்டத்திலிருந்து ஒரு சிலர் பாவேந்தர் பேச வேண்டும் என்று சொல்வித் துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தனர். பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்கப் பாவேந்தர் எழுந்து பேசினார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு சில திங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர், திரு.வி.க. மறைமலை யடிகள் ஆகியோரின் உரைநடையைக் கூட்டத்தில் கேலி செய்திருந்தார். இதைப் பற்றிக் குறிப்பிட்ட பாவேந்தர் பெருஞ்சீற்றங் கொண்டு, தமிழ் நாட்டிலே, தமிழர்கள் நடுவிலே, தமிழறிஞர் ஒருவரின் படைப்பை ஒருவன் கேவலமாகப் பேசுகிறான். மான உணர்விருந்தால் நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா? எப்போது அவன் தமிழை இழித்துப் பேசினானோ, அப்போதே அவன் தலை கீழே அற்று விழுந்து விட்டது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பரவியிருக்க வேண்டாமா?" என்று பேசினார். உணர்ச்சி வெறியினால் அவர் குரல் கம்மியது; கண்களில் நீர்கசிந்தது.