பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 © ஆஸ்தி © நாஸ்தி அணுகுண்டு எஸ்.வி. பொன்னையா திருவாளர் அணுகுண்டு எஸ்.வி. பொன்னையா ஆத்தூர்க்காரர்; தீவிர தி.க., கருஞ்சட்டைக்காரர்; தாடியோடு திரியும் ஆத்தூர்ச் சாக்ரட்டீஸ். இவர் சாக்ரட்டீஸ் போல எதிர்ப்படும் எல்லாரையும் கேள்விகள் கேட்கிறார்; மனிதனைச் சிந்திக்க வைக்கும் கேள்விகளாகத் தொகுத்து ஒரு பிரசுரமே வெளி யிட்டிருக்கிறார். ஆத்தூர்க்கடைத் தெருவில் இருக்கும் இவருடைய சைக்கிள் கடை ஒரு சிந்தனைப் படடறை. நீங்கள் போனாலும் உங்களைக் கட்டாயம் கேள்விகள் கேட்காமல் விடமாட்டார்; வேண்டுமானால் போய்ப் பாருங்கள். 1953-இல் பாவேந்தரை ஆத்தூரில் சந்தித்து உரையாடியதை நினைவு கூர்ந்து இக்கட்டுரையில் சொல்கிறார் பொன்னையா. 1953ஆம் ஆண்டு, ஆத்தூரில் சேர்மன் ஆறுமுகனார் மன்றத் திறப்பு விழாவின்போது பாவேந்தர் வந்திருந்தார். அவருக்கு வேண்டிய நண்பர் வெங்கடாசலம் வீட்டில் தங்கியிருந்தார். விழாவில் பேசினார். நானும் என் நண்பர் குலாமும் அவரைச் சந்தித்து உரையாடினோம். இசுலாமிய நண்பர் குலாமை நாங்கள் அறிஞர் குலாம் என்று அன்புடன் அழைப்போம். அவர் ஆத்தூர் ஹாஜி அச்சகத்தின் உரிமையாளர்; பெரியாரிடத்தில் நீண்ட நாள் தொடர்புடையவர். சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத் தொண்டர். அவர்