பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 ஆஸ்தி நாஸ்தி பாவேந்தரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். "இந்து மதத்தைப் போலத்தான் இசுலாம் மதத்தையும் கருதுகிறீரா? சுயமரியாதை இயக்கம் வற்புறுத்தும் சீர்திருத்தக் கருத்துக்களைக் குரானும் சொல்லுகிறது. குரான் கருத்துக்களை ஏற்று நடைமுறைப் படுத்தியவர் முகம்மது நபி. ஏசு, முகம்மது, சிவன் எல்லாம் உங்களுக்கு ஒன்றுதானா?” என்று கேட்டார் அவர். "ஆமாம்!” என்றார் பாவேந்தர். "அது எப்படி? உங்கள் கருத்துத் தவறு!" என்றார் குலாம். பாவேந்தருக்குச் சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. “என்னைப் பொறுத்தவரையில் மதம் என்பது கழுதை லத்திக்குச் சமானம். கழுதை போட்ட முதல் லத்திக்கு ஒரு மரியாதையும், இரண்டாவது லத்திக்கு மற்றொரு மரியாதையும் என்னிடத்தில் கிடையாது" என்று வெடுக்கென்று சொன்னார் பாவேந்தர். அடுத்தநாள் திருவண்ணாமலையில் ப.உ. சண்முகம் தலைமையில் பாரதி விழா. பாவேந்தர் பேசினார். “பாரதி பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும். அவரைப் பற்றிப் பேச என்னைவிடத் தகுதி இந்த நாட்டில் எவனுக்கும் இல்லை!" “எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது. ஜெமினிகணேசன் என்ற நடிகர் முன்னாலிருந்து அவ்விழாவை நடத்தினாராம். இந்த நாட்டில் நான்தான் பாரதியின் இலக்கிய வாரிசு. எனக்கும் அழைப்பில்லை; பாரதியின் மகளுக்கும் அழைப்பில்லை. பாரதியின் தங்கை, மகள், மனைவி இவர்களுக்குக் கூட விழாப்பந்தலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் முயன்று தான் அவர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள்” என்று காட்டமாகப் பேசினார். மறுநாள் நாராயண குப்பத்தில் தி.க. தோழர் கெங்கப்பன் மகளுக்கு இவர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு அறிவுரை வழங்கியதோடு கடவுளைப் பற்றியும் ஒன்றரை மணி நேரம் பேசினார். அப்போது ஆஸ்திகம்-நாஸ்திகம் பற்றி அவர் சொன்ன விளக்கம் நினைவுக்கு வருகிறது. "ஆஸ்தி என்றால் செல்வம், நாஸ்தி என்றால் அழிவு. பொருளை வீணடிக்காமல் காப்பவன் ஆஸ்திகன். ஆண்டவன் பேரால் பால், தயிர், நெய், தானியம் ஆகியவற்றை அவிர்ப்பாகம் என்று தீயில் கொட்டி நாசம் செய்பவன் நாஸ்திகன். காலப்போக்கில் இக்கருத்து எதிரெதிராகத் திருத்தப்பட்டுவிட்டது. உந்து வண்டி நிலையத்தில்