பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 309 சுயமரியாதை மாநாட்டில் சந்தித்தோம்; ஒன்றாகத் தங்கியிருந்தோம். நான உரை எழுதிய ஐங்குறுநூறு-மருதத்திணை வெளிவந்தபோது பாரதிதாசனாரின் பாடல் முதல் தொகுதி வெளியாயிற்று. ஞானியார் சுவாமிகள் தலைமையில் சைவ சமாஜக் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. நானும் மணி, கோடீசுவரனும்' கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பாரதிதாசனார் வீட்டில் தங்கியிருந்தோம். தமிழைப் பற்றியும் சைவத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசுவார். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் மனைவிக்கும் என் மனைவிக்கும் நெருங்கிய நட்பு. தங்கள் சுக துக்கங்களை நீண்ட நேரம் பரிமாறிக் கொள்வர். சில சமயங்களில் மனைவியை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு இரண்டொரு நாள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து அழைத்துப் போவார். தஞ்சை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற புலவர் குழுவில் நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாகர்கோவில் புலவர் குழுவுக்குச் சென்றிருந்த போது என் மாணவன் நாஞ்சில் ஆரிது வீட்டில் தங்கியிருந்தோம். காலையில் கன்னியாகுமரி சென்று எழுகதிரின் அழகைக் கண்டுகளித்துத் திரும்பினோம். நாங்கள் தனியாக இருக்கும்போது நான் பாடும் பாட்டிலுள்ள குறை பற்றிச் சொல்லு பார்ப்போம். நீர் சொன்னால் சரியாக இருக்கும் என்று கேட்பார். நான் குறை சொல்லமாட்டேன்; குறையும் இல்லை என்று நான் சொல்லுவேன். புதுவையிலே ஆட்சிக்குவரும் தலைவர்களெல்லாம் நீங்கள் திட்டினால் பொறுத்துக் கொள்கிறார்களே! ஏன்? என்று நான் கேட்பேன். எல்லாத் தலைவனும் 1932லிருந்தே எனக்குப் பழக்கம்' என்று அவர் சொல்லுவார். நாங்கள் அரசியல்வாதிகளாயிருந்தால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புண்டு; நாங்கள் இலக்கியவாதிகள். எப்போதாவது 1) பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசின் தம்பி மணி. கோடீசுவரன் வேலூர் மகந்தை உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்: ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்.