பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 மறத் தமிழன் தருமபுரி செல்லையா தருமபுரியில் நாட்டுவைத்தியராக விளங்கும் திரு. செல்லையாவை எல்லாரும் அறிவர். வயது முதிர்ந்த கட்டைப் பிரம்மச்சாரி. தமிழ், தமிழர், சீர்திருத்தம். இவர் உயிர் மூச்சு. யாழ்ப்பாணத்துத் தமிழரான இவர் பாவேந்தரோடு பழகிய நாட்களை நினைவுபடுத்தி இக்கட்டுரையில் கூறுகிறார். நான் பிறந்தது கி.பி. 1892 யாழ்ப்பாணத்துச் சைவவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தாயார் சீனியர் கேம்பிரிட்ஜும், புலவர் தேர்வும் படித்தவர். என் உரிமையுணர்ச் சிக்கு என் தாய் தான் காரணம். இளமையிலிருந்தே எளிதில் உணர்ச்சி வசப்படும் நான், யாழ்ப்பாணத்தில் ஜூனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்தபோது, புத்தகத்தைக் கல்லூரி முதல்வர் முகத்தில் விட்டெறிந்துவிட்டுக் கல்வியை முடித்துக் கொண்டவன். கண்டியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அது சிங்களவருக்குப் பத்தினிக் கோட்டம். அதற்குப் பக்கத்தில் ஒரு மசூதி உள்ளது. கோயிலும் மசூதியும் அருகருகே இருந்த காரணத்தால் இந்து-முஸ்லீம் சச்சரவு அடிக்கடி எழுவது வழக்கம். ஒருமுறை அது பெரிய கலவரமாக மூண்டு விட்டது. அதில் எனக்கும் முக்கியப் பங்குண்டு. அந்தக் கலவரத்தில் 200 இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்; சில இந்துக்களும் சிங்களவர்களும் உயிரிழந்தனர். திரு. இராமநாதன் இலண்டன் சென்று வாதாடி எங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். என்றாலும் நான் நாடு கடத்தப்பட்டேன். நாடு கடத்தப்பட்டதும் நான் நேராகத் தமிழகம் வந்து நாகப்பட்டினத்தில் தங்கினேன். ஆறு மாதங்கள் கழித்து ஒருமுறை