பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 சொந்தச் சிந்தனையாளர் நடிகர்கள்: 1. திரு. என்.எஸ்.கிருஷ்ணன் 2. திரு. திருவாவடுதுறை ராஜரத்னம் (குழலிசை வேந்தர்) 3. திரு. காளி என். ரத்தனம் 4. திரு.சி.வி.வி. பந்துலு 5. திருமதி டி.ஏ. மதுரம் 6. திருமதி எஸ்.பி.எல்.தனலட்சுமி 7. திருமதி பி.எஸ். ஞானம் 8. திருமதி பி.ஆர். மங்களம் கதை வசனம் பாட்டு பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குத் துணையாகச் சினிமா உலகம்' பத்திரிகை ஆசிரியர் பி.எஸ். செட்டியாரும், ஜலகண்டாபுரம் ப. கண்ணனும் இருந்தனர். எல்லிஸ் ஆர். டங்கன், மொய்லன் ஆகிய இருவரும் படத்தின் இயக்குநர்கள். திருவாரூர் இசைக் கல்லூரியில் பணியாற்றிய டி.வி. நமசிவாயம் (டி.என். ராமனின் தங்கை மகன்) இசையமைப்பாளர். மோகினி பிக்சர்ஸ் அலுவலகம் முதலில் சேலம் சந்திப்பில (சூரமங்கலம்) இருந்தது; பின்னர் சென்னைக்கு மாறியது. சென்னையில் பொறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் பங்களாவில் படக்கம்பெனியின் அலுவலகம் இருந்தது. கவிகாளமேகம் படப்பிடிப்பு கோடம்பாக்கம் பிராக்ஜோதி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நடுவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மதுரை தண்டபாணி பிலிம்ஸோடு கூட்டுச் சேர்ந்து படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரண்டு முதலாளிகள்! இரண்டு டைரக்டர்கள்! ஏகப்பட்ட செலவு! படம் வெளிவந்ததும் சுமாராக ஒடியது. இழப்பு எதுவுமில்லை! குறைந்த லாபமே கிடைத்தது. இப்படத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல் எழுத வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவரை நேரில் கண்டு பேசி இதைப்பற்றி முடிவு செய்ய புதுச்சேரி புறப்பட்டோம். புராணப்படம் என்றவுடன் பாவேந்தர் முதலில் மறுத்தார். சினிமாத்துறைக்குப் போய் புராணப்படம் எழுதித்தான் சம்பாதிக்க வேண்டுமா?’ என்று கேட்டார். உங்கள் திறமை வெளிப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கூட்டி வந்தோம்.