பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பாவேந்தர் நினைவு போற்றுவோம் உணர்விலே அரும்பி, சொற்களிலே மலர்ந்து, கருத்துக்களிலே மணங்கமழ்ந்த அப்படிப்பட்ட கவிதைகளைப் புதிதாகப் பெறும் வாய்ப்பு முடிவுற்ற நாள் அந்நாள். தமிழ் மொழியின் மீட்சிக்கும், மறுமலர்ச்சிக்கும், உரிமைக்கும் ஏற்றத்துக்கும், ஆட்சிக்கும், மாட்சிக்கும் எழுச்சிப் பண்பாடி, உணர்ச்சிக் கனல் எழுப்பி, இளைஞர்களின் குருதியிலே சூடேற்றி, இன உணர்வோடு மொழிகாக்கும் போரிலே குதித்திடச் செய்த அந்தக் கவிஞரின் குரல். ஒய்ந்தது. கண் மூடிகளாக கருத்துக் குருடர்களாக, தம்மையே இழிபிறவிகளாக எண்ணிக்கிடந்த ஏமாளிகளான தமிழ் மக்களை அறிவுக்கண் திறந்து காணச் செய்த கவிஞரின் உணர்வுகள், முழக்கங்கள், பாட்டு வரிகள், பகுத்தறிவு விளக்கங்கள், சாதிசமய மூட நம்பிக்கைகளைச் சாடிய கேள்விக் கணைகள்-யாவும் இன்றும் நமது உள்ளங்களில் ஒலித்துக் கொண்டுள்ளன. தமிழன் என்று ஒருவன் வாழ்ந்திடும் காலம் வரை-அவை ஒலித்துக் கொண்டிருக்கும் தகுதியுடையன. . புரட்சிக் கவிஞரின் கவிதை, தமிழ் உள்ளளவும் வாழும். அவர் உருவாக்கிய கவிதை மரபும் வாழும் அவர் தம் வழி வழி வளரும் கவிஞர் தலைமுறையும் வளரும். ஆயினும்: புரட்சிக்கவிஞர் ஊட்டிய உணர்வுகளை வளர்த்த சிந்தனைகளை வாழ்வித்த இனப்பற்றை மலர்வித்த மொழி ஆர்வத்தை வடித்த கற்பனையை தொடுத்த உவமைகளை தீட்டிய இயற்கையை வழங்கிய செஞ்சொற்களை முழங்கிய பாநடையை அவரது கவிதையைச் சுவைப்பதாலன்றி வேறு வகையால் பெறுதல் இல்லை. அப்பாவேந்தரின் நிலைபெற்ற தோற்றமே, அழியாத வடிவமே, அவருடைய உயிர் புகுந்த ஓவியமே அந்தக் கவிதைகள் தாம்! அவை நம்மோடு வாழ்பவையே! நமக்காகப் பிறந்தவையே! அவையெல்லாம் நம்மினத்தின் வாழ்விற்காகத்தான்! நம்மை வாழ வைப்பதற்காகத்தான்! எனவே, பாவேந்தர் இன்றும் வலம் வருகிறார். அவரது கவிதை வடிவில்! நம்மோடு உரையாடுகிறார் பாட்டு நடையில்! நமக்கு உணர்வு ஊட்டுகிறார். அவற்றைப் படிக்கும் நிலையில்! ஆம். அந்தக் கவிஞரின் கவிதைகளைப்