பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

члкземѣеп-едѣцарварcoваранѣ 323 போற்றிடும் கடமையைச் செய்வதிலேதான் - தமிழ் இனக் காப்புக்கு ஏற்ற அரண் கண்டவர்களாவோம் என்பதை நாம் மறத்தலாகாது. அவரது நினைவு போற்றுங் கடமை தமிழர்க்கு எந்நாளும் உரியது. கவிஞரிடையே 'அரிமா எனவும், புலவர்களிடையே தமிழ்க்களிறு எனவும், பகுத்தறிவாளர்களிடையே ஏறு எனவும் வலம் வந்த பாவேந்தரிடம் நான் பழகும் வாய்ப்புப் பெற்ற நாட்கள் நினைவிற்கு வருகின்றன. 1940ஆம் ஆண்டு நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்தேன். சிதம்பரத்தில் என் தந்தையார்-ஒரு தொழில் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருநாள் புவனகிரி செல்லும் வழியில்-புரட்சிக் கவிஞர் எங்கள் இல்லம் வந்தார். அவரது புவனகிரி (பெருமாத்துரர்) நண்பர்கள் பலர்-என் தந்தையாரிடம் மதிப்புடன் பழகி வந்தனர். அவர்கள் என் தந்தையாரைப் பற்றிக் கூறியிருந்ததினால் கவிஞர் வந்தார். என் தந்தையார் அவர் தோற்றத்தைப் பார்த்தவுடனேயே அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு வாங்க, வாங்க கவிஞரே!” என்று ஆர்வத்துடன் வரவேற்றார். பின்னர் இருவரும்;தன்மான இயக்கம், இந்தி எதிர்ப்பு:முதலானவை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் உணவருந்தினர். எங்கள் இல்லம் என்பதால், சைவ உணவையும் (வேறு வழியில்லை என்று) மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டார். அப்போதுதான் அவரை நெருங்கிக் கண்டேன். உணவு முடிந்ததும் சிகரெட் வாங்கிவரச் சொன்னார்; வாங்கி வந்து கொடுத்தேன். நீ என்ன படிக்கிறே? என்றார். முதல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியெட் என்றேன். உடனே மகிழ்ச்சியோடு - பலே பலே - அப்படித்தான். படி. அந்தப் பயல்களுக்கெல்லாம் நமது திறமையைக் காட்டணும். நல்லாப்படி: என்று அன்போடு கூறினார். அதுவே அவரிடம் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. அடுத்த ஆண்டு திராவிட இயக்கச் சார்புடைய ஒரு வணிகர் மறைந்ததையொட்டி நடத்தப்பட்ட நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர் தலைமையேற்றிட இசைந்து சிதம்பரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பலருள் நானும் ஒருவன். நான் ஒர் இளம் மாணவனாக இருந்து தடையின்றித் தொடர்ந்து பேசியது அவருக்கு ஒரு வகையில் வியப்பினை ஏற்படுத்தி இருந்தது.