பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் 卷 - 327 குறித்துத் தாங்களே இப்படிப் பேசுவது சரியல்ல; தேவையுமல்ல என்று விளக்கிக் கூறினேன். அதனை, ஏனோ அவர் ஏற்கவில்லை. ஆனாலும் என்னை அறிந்திருந்த அவர், கோபித்துக் கொள்ளவில்லை என்று தான், நான் ஆறுதல் பெற்றேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றும் கட்டம் உருவாகியது. அந்நிலையில் புரட்சிக்கவிஞர் அவர்களும், குத்துளசி குருசாமியார் அவர்களும் தந்தை பெரியார் அவர்களிடம் மாறுபட்ட நிலையில்-அவரிடம் உரிமைக்குப் போராடவேண்டும் என்று வலியுறுத்தினர். அதனை அண்ணா அவர்களும் என் போன்ற தோழர்களும் ஏற்கவில்லை. புரட்சிக் கவிஞரின் இயல்பு, ஒன்றைப் போற்றினும் எல்லையில்லாத அளவு போற்றிப் புகழுவார். ஒன்றில் மாறுபடினும் துற்றுதலின் எல்லைக்கே செல்வார். இரண்டிலும் அண்ணா அவர்கள் அளவறிந்தே ஈடுபடுவார். எனவே கவிஞர் உள்ளத்தில், அண்ணா விடமும், எங்களிடமும் மாறுபாடு ஏற்பட்டது. பெரியாரின் போக்குத் தவறு என்ற பின்னர், எதிர்த்துப் போராடத் துணிவில்லாத இவர்கள் கோழைகள் என்றார் கவிஞர். ஆனால் அதற்காக, அண்ணா அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அண்ணா அவர்கள் கவிஞரைப் பற்றிக் கூறியது, "அவர் தலைசிறந்த கவிஞர். ஆனால் ஓர் அரசியல் கட்சியை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பது அவருக்குப் பழக்கமில்லாதது. மேலும் புதுச்சேரி அரசியல் போலவே எங்கும் நடத்தலாம் என்று அவர் கருதுகிறார். நாம் என்ன செய்ய முடியும்?” என்பதுதான். அதன் பின்னர்-புரட்சிக் கவிஞர் நேரடியாக எந்தக் கட்சியிலும் தொடர்பு கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். ஆயினும் எல்லாக் கட்சிகளைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் அவ்வப்போது அவருக்குத் தோன்றும் உள்ளக் குமுறலை தமது கவிதைகளில் இடம் பெறச் செய்து வந்தார். அதனால் அவரிடம் நான் கொண்டிருந்த தொடர்பும், நாளடைவில் குறையும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம். என்றாலும் அவரிடத்தில் கொண்டிருந்த மதிப்பும்-அவர் தம் கவிதையில் கொண்டிருந்த பற்றும் மாறவில்லை; மாறியும் விடாது. கவிதையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னர். புரட்சி உணர்வில் அவர் தமிழ்நாட்டு வுெல்லி; இயற்கையைப் பாடுவதில் அவர் வால்ட்விட்மன்: வரலாற்றைக் காவியமாக்குவதில் அவர் இளங்கோ, வருணனையில் சொல்வளத்தில் அவர் கம்பர்; காலத்தின் தேவையில் அவர் பாரதி; நம்முடைய உள்ளத்தில் அவர் என்றும்