பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 329 அன்றோ, இவர்கள் இடந்தருகின்றனர்!’ என்று கூறித் தமது வெகுளியை வெளிப்படுத்தினார். மேலும் தமிழிசை பற்றி அவர் தெரிவிக்கையில், "எப்போ வருவாரோ!" என்று கடவுளைக் கூப்பிடறான். எவ்வளவு நாளா கூப்பிடறான். தெய்வங்களைப் பற்றிய கதைகளையே பொருளாகக் கொண்டு பாடிக் கொண்டிருப்பதால் என்ன பலன்? மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை, உழைப்பை, தொழிலை, குடும்ப வாழ்க்கையை, காதலைப் பாடும் பாடல்களைப் பாடினாலன்றோ மக்களுக்குப் பயன்கிட்டும் உணர்ந்து, சுவைத்து, களித்து ஏற்றுக்கொள்வர்” என்றார் பாவேந்தர். அதன் தொடர் சிந்தனையில் விளைந்த தமிழ் அமுதமே, அவர் இயற்றிய இசையமுது எனலாம். ஒரு நாள் தேசிகர் பாடிய பாட்டொன்றைத் தோழர் ஒருவர் பாவேந்தரிடம் கூறினார். அப்பாட்டு, கடவுள் உண்மையை வலியுறுத்தும் வகையில், "இல்லை என்பான் யாரடா? தில்லை வந்து பாரடா?" என்று தொடங்குவது. அது குறித்து ஒரு தமிழ் மன்றத்தில் பேசுகையில், பாவேந்தர், "அப்படிப் பாடினாராம் தேசிகர், இப்படிப் பாடுகிறேன் நான்” என்று கூறி, "இல்லை என்பேன் நானடா "தில்லை கண்டு தானடா என்று மொழிந்தார். நான் தில்லை வந்துவந்து போவது தேசிகருக்குத் தெரியாது-சிதம்பர ரகசியமே திரையை நீக்கிக் காட்டப்படும் ஒன்று மற்ற பெரு வெளியே என்பதும் தெரியாமல்-தில்லைவந்து பார்க்கச் சொல்கிறார் என்றார் பாவேந்தர். பாவேந்தர் மற்றவர் கருத்து-அவர் தம் நம்பிக்கை என்பதற்காக எதையும் பொறுத்தல் அரிதாகும். எதைக் குறித்தாயினும் தாம் தவறு என்று கண்டவற்றை உடனே கடுஞ்சினத்துடன் கண்டனம் செய்வார். அவரது ஆழ்ந்த புலமையும், தமிழ் மாட்சியை நாட்டும் பற்றும், குறிக்கோள் (கொள்கை) ஆர்வமும், ஒருவகைக் கவிச் செருக்கும் அதற்கு ஏதுவாகும். உள்ளத்திற் பட்டதை உணர்ச்சி கொண்ட வடிவம் கொள்ளச்