பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பாவேந்தர் நினைவு போற்றுவோம் வருகின்றதே என்று என் தோழர்கள் வினவினர். "நன்னூல் தீட்டிய பவணந்திக்குப்பின், இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஒரு புதிய இலக்கணம் இயற்றப்படாமல் இருப்பதுதான் குறை. மொழி உயிருடையது; வளரும். சில மாறுதல்களும் விளையும். அதற்கேற்ப அவற்றின் இயல்பைக் கண்டு ஓர் இலக்கணம் வகுத்திருக்க வேண்டும்" என்றும் 'அதனால் இலக்கணப் பிழை எல்லாம்-தமிழின் வளர்ச்சி என்று கருதலாகாது. மொழி வளர்சசி ஒரு முறையாக நிகழ்வது. அதுவும் ஒர் இலக்கணத்தின் அடிப்படையில் காணப்பட வேண்டும்" என்றும் விளக்கம் அளித்தார். தனித்தமிழ் ஆர்வம் கொண்ட என் நண்பர்கள், தாங்கள் இயற்றும் கவிதைகளில் தமிழ் உணர்வு பொங்குகிறது. ஆனால் அதில் சில சொற்கள் தமிழாக இல்லாமல்-பிற மொழிச் சொற்களாக உள்ளனவே. தாங்கள் தனித்தமிழிலேயே கவிதைகள் இயற்றலாகாதா?’ என்று கேட்டனர். உடனே கவிஞர், தனித் தமிழ் நல்லதுதான். கூடாது என்பதல்ல. ஆனால் ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வைக் கவிதையாக வடிக்கும் நிலையில் இயல்பாக வரும் சொல்லை விட்டுவிட்டு, தனித்தமிழ்ச் சொல்லாகத் தேடிப் பயன்படுத்துவது என்பது கவிதையின் உணர்ச்சி வேகத்தைத் தடைப்படுத்தி அதன் அழகைக் குறைத்துவிடும். 'கவிதை' செய்யப்படுவதல்ல-அது உள்ளத்தின் வெள்ளப் பெருக்கு. அது எப்படிவருகிறதோ-அப்படியே அமைவதுதான் அதற்குச் சிறப்பு. தனித்தமிழ், உரைநடைக்கு. பேச்சுக்கு வேண்டியதே. ஆனால் கவிதைக்கு ஒத்துவராது" என்றார் கவிஞர். கவிதை மன்னரிடம் மறுப்புக் கூற எங்களில் யாருக்கும் துணிவில்லை. சிறிது நேரம் வேறு ஏதோ பேசிய பின்னர், தாங்கள், தனித்தமிழ் நடை கவிதைக்குக் கூடாது என்கிறீர்களா? இயலாது என்கிறீர்களா?” என்று நான் ஒரு ஐயம் எழுப்பினேன். கூடாது என்பது அல்ல. அப்படிக் கூற முடியாது. இயலாது என்றுதான் சொல்லலாம். கவிஞர்கள் உளப்பாங்கும் வேறுபடும். உணர்ச்சிப் பிழம்பாகக் கவிஞன் ஒன்றை உள்ளத்தில் கருக்கொண்டு உயிர்க்கும்போது, எந்த நடையில் அந்தக் கருத்து ஏறி வருகிறதோ, அதுவே பொருத்தம் உடையது. அதை மாற்றுவது ரிப்பெயர் (Repair) செய்வது போலாகிவிடும்" என்றார் கவிஞர். "அது உண்மை. ஆனால் உணர்ச்சி ஊட்டும் வண்ணச் சொற்கள். தமிழில் இல்லை என்று கருதலாமா?” என்று கேட்டேன். "அப்படிச் சொல்லவில்லை. அந்தச் சொல் எதுவானாலும் பாட்டோசையோடு