பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பாவேந்தர் நினைவு போற்றுவோம் வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும் கருத்தோ நாட்டில் திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ? செல்லுபடி Bräß திருடர்கள் ஜாக்கிரதை திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்றால் வருந்தீமை என்னை? நியா யஸ்தலத்தை அறமன்றம் எனில் வாய்க் காதோ? அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ இந்தக் கருவறுக்கும் வினைசெய்வார் கலப்பாலில் துளி நஞ்சும் கலத்தல் வேண்டாம்! பாவேந்தரின் உள்ளத்தில், “பிறமொழிக் கலப்பினால் தமிழுக்குக் கேடு ஏற்படும்; எனவே தமிழ்ப் பயிரிடை வடமொழிக் களை வளர இடந்தரலாகாது என்னும் எண்ணம் உரம் பெற்றதன் விளைவே, மேலே காணும் கவிதையும் அவை ஒத்த பலவும். தமிழில் வடசொல் கலத்தல் வேண்டாம் என்றார். கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்” என்றார். 'கணக்காயர் என்னும் தலைப்பில் "தமிழ்மொழியை வடசொல்லுக்கு மிகத்தாழ்ந்த தென்கின்றான்! வடசொற்கு மகிழ்கின்றான்! ಮ೬೧ಕíäåதமிழ் ச்சொல் இது எனப்பிரித்துக் காட்டிடவும் மாட்டான்! என்று உரைத்ததனாலும் பாவேந்தர் உள்ளம் விளங்கும். 'கூத்தர் என்னும் தலைப்பில் தாய்ப்பாலில் நஞ்செனவே, தமிழில் வடமொழி சேர்த்தார்! தவிர்தல் வேண்டும்.