பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LπΦονίigi-SΦιμώα αυωάαφαώ 337 தமிழ்ப்பற்றையும், தன்மான இயக்கப் பற்றையும் ஊட்டுவதை எனது கடமையாகக் கொண்டிருந்தேன். திருவாளர்கள் முருகு சுப்பிர மணியம், பெரியண்ணன் ஆகியோரும் வேறு சில இளைஞர்களும், என்னிடத்திலும், எனது கொள்கையிடத்தும் ஈடுபாடும் ஆர்வமும் காட்டி எனக்கு மிகவும் ஆதரவாக விளங்கினர். கோனாப்பட்டில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இயக்கத்தின் சார்பாகப் பேசுவதற்கு அறிஞர் அண்ணாவை அழைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அண்ணாவுக்கு முடங்கல் விடுத்தோம்; பணமும் அனுப்பினோம். அவரிடமிருந்து மறுமடல் ஏதுமில்லை. நானே நேரில் சென்று அண்ணாவை அழைத்துவர முடிவு செய்து சென்னை சென்றேன். அண்ணா சென்னையில் இல்லை. நேரே காஞ்சி சென்றேன். அண்ணா காஞ்சியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். - நாடக மேடைக்கே நான் சென்றேன். அண்ணா இராவணன் வேடத்தில் இருந்தார். மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்து, வழிச் செலவுக்குப் பணமும் கொடுத்து விட்டுக் கோனாப்பட்டு திரும்பினேன். அண்ணா இம்முறையும் வரவில்லை. மறுமுறை நான் சென்னையில் அண்ணாவைச் சந்தித்தபோது, கூட்டத்துக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்குள் செட்டிநாட்டு இளைஞர் சிலர் பாரதிதாசனைக் கூட்டத்துக்கு அழைத்திருந்தனர். அவர் கோனாப்பட்டில் பெரியண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். நான் நேரில் சென்று கூட்டத்துக்கு அழைத்ததும் ஒத்துக் கொண்டார். பாரதிதாசன் கோனாப்பட்டு வருவதற்குச் சில நாட்களுக்கு முன், திருவாளர் சோமசுந்தரம் செட்டியார் என்பவர் அங்கு இலக்கியச் சொற்பொழிவாற்றினார். அவர் பழுத்த சைவர். பெரிய புராணத் திலும், திருநாவுக்கரசர் தேவாரத்திலும் அதிக ஈடுபாடுடையவர். இவரைப்பற்றிப் பாரதிதாசனிடத்தில் கூறினோம். பாரதிதாசன் கோனாப்பட்டுக் கூட்டத்தில் பேசும்போது சைவத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்தார். சிறுத்தொண்டர் வரலாற்றையும், இயற்பகை நாயனார் வரலாற்றையும் கடுமையாகச் சாடினார். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்ற தொடரை எடுத்துச் சொல்லி நகையாடினார். எந்நாட்டவர்க்கும் உரிய சிவன் பெரிய சிவன்! தென்னாட்டுச் சிவன் குள்ளச் சிவனோ?” என்று கேலி செய்தார்.