பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 செட்டிநாட்டிலிருந்து சென்னை வரை. "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இங்கு வேரில் பழுத்த பலா! என்ற எனது பாட்டு வரிகளைக கேலி செய்து மேடையில் என்னை எதிர்த்துக் கேள்விகள் கேட்டனர். வேர்ப்பலா என்று ஒரு மரம் இல்லையென்று வாதிட்டனர்" என்று கூறினார் பாரதிதாசன். முத்தமிழ் நிலையம் பாரதிதாசன் கானாடு காத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கியிருந்தபோது, அவருடைய நூல்களை வெளி யிடவும், அவர் நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம் என்ற பெயரால் ஒர் அமைப்பை ஏற்படுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. அந்த அமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் செட்டி நாட்டு இளைஞர்களான முருகுசுப்பிரமணியமும், பெரியண்ணனும் ஆவர். முதலில் பாரதிதாசனின் இயல், இசை, நாடகப் படைப்புக்களை இன்ப இரவு என்ற பெயரில் அரங்கேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சென்னையில் முத்தமிழ் நிலையத்தின் தலைமையகத்தை நிறுவ எல்லாரும் முடிவு செய்தனர். முத்தமிழ் நிலையப் பணிகளை முன்னின்று நடத்துவதற்கும் அதை மேற்பார்ப்பதற்கும், என்னை வரும்படி பாரதிதாசன் அழைத்தார். நானும் சென்னை செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்ததால், அவர்அழைப்பை ஏற்றுக் கொண்டேன். சென்னை செல்வதற்கு என்னைத் துண்டிய அடிப்படைக் காரணங்கள் பல உண்டு. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைக்காரனாக' இருப்பது எவ்வளவு தொல்லையானது என்பதைப் பட்டு அறிந்தவர்களே உணர்வர். அவன் கடவுளுக்கும், சமயத்துக்கும் எதிரியாகக் கருதப்பட்டான். நான் கோனாப்பட்டில் வாழ்ந்தபோது பார்ப்பனருக்கு மட்டுமல்லாமல், செட்டிமார்களுக்கும் நான் எதிரியாகக் கருதப்பட்டேன். தன்மான உணர்வும், தமிழ் உணர்வும் கொண்ட செட்டி நாட்டிளைஞர்கள் என் பக்கம் இருந்ததால், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. நான் சைவப்பிள்ளைமார் குலத்தில் பிறந்தவன். என் மனைவி அலமேலு வல்லம்பர் (வல்லத்து வேளாளர் என்றும் கூறுவர்.) வகுப்பைச் சேர்ந்தவள். கலப்பு மணம் செய்து கொண்ட காரணத்தால், சாதி எதிர்ப்பும் எனக்கிருந்தது. 1943ஆம் ஆண்டில்-பாரதிதாசனின் செட்டிநாட்டு வருகைக்கு முன் கோனாப்பட்டில் 10 நாட்கள் தமிழ்விழா ஒன்று நடத்தினோம். அந்த விழாவிற்குத் தலைமை தாங்கவோ, சொற்பொழிவாற்றவோ யாரும் முன்வரவில்லை. முதல் மூன்று நாட்களும் நானே தலைவன்; நானே