பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 செட்டிநாட்டிலிருந்து சென்னை வரை.... கொண்டேன். அதன்பிறகு நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டார். நெடுஞ்செழியனுக்கும் கேட்ட சம்பளம் வராத காரணத்தால், அவரும் அப்பதவியிலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அண்ணா சம்பளமில்லாமல் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றார். டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி நடத்திக் கொண்டிருந்த லிபரேட்டர் ஏட்டில் எனக்குத் துணையாசிரியர் வேலை கிடைத்தது. முத்தமிழ் நிலையத்தில் இன்ப இரவு நாடக ஒத்திகை நாள்தோறும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சென்னையில் குடியிருக்க ஒரு வீடு பார்த்துக் கொண்டு, அலமேலுவை அழைத்து வரக் கோனாப்பட்டு சென்றேன். சென்னை வாழ்க்கை சென்னை அருணாசல ஆசாரித் தெருவில் 12ஆம் எண் வீட்டில் நான் குடியேறினேன். பாரதிதாசனும் தொடர்ந்து பத்துத் திங்கள் எங்கள் வீட்டிலேயே இருந்தார். அப்போது பெரியாரைத் தவிர, இயக்கத்தைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும், தொண்டர்களும் பாரதிதாசனைக் காண என் இல்லம் வருவர். திருவாளர் ம.பொ.சி. போன்ற மாற்றுக் கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்களும், பாவலர்களும் பாரதிதாசனைக் காண வருவதுண்டு. பாரதிதாசன் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்தபோது தான், அவருக்குப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. ரொக்கமாக ரூ.25,000/- அவருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், கலைஞர்களும் அவ்விழாவில் பங்கு கொண்டனர். தமிழகத்தில் வேறு எந்தக் கவிஞருக்கும் இவ்வளவு சிறப்பாக நிதியளிப்பு விழா நடைபெற்றதில்லை. நிதியளிப்பு விழாவில் பெற்ற தொகையைப் பாரதிதாசன், என் மனைவி அலமேலுவிடம் தான் கொடுத்து வைத்திருந்தார். ரூ.25,000/- என்பது அக்காலத்தில் மிகப்பெரிய தொகை. பாவேந்தருக்கு நிதி கிடைத்ததும், அவருடைய துணைவியார் திருமதி பழனியம்மாளும், பெண்களும் என் இல்லம் வந்தனர். பெண்களுக்குக் கொஞ்சம் நகைகளும், நல்ல புடவைகளும் எடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். சீர்திருத்தக்காரரான பாவேந்தர், பெண்கள் நகையணிவதையும், ஆடம்பரமாக உடையுடுத்துவதையும் வெறுப்பவர். என்றாலும், அவரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி ரூ. 7000/-க்கு நகைகளும் புடவைகளும் வாங்க இசைவு பெற்றோம். நானும் அலமேலுவும்